பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

형 விட்டு சித்தன் விரித்த தமிழ் அவன் கொடுத்த செல்வம்! அவனுடைய செல்வத்தை அவன் பெயரால் பராமரிப்பது அடியேனின் கடமை’ என்று எண்ணிய வண்ணம் குழந்தையும் கையுமாக இல்லத்தை அடைகின்றார். அவர்தம் தேவிகள் விரஜை எதிர்கொண்டு வந்து உள்ளம் உருகிக் கோயிலிலிருந்து அவர் கொண்டு வரும் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வதைப்போல் இரண்டு கைகளாலும் பெற்றுக் கொள்கின்றாள். விரஜை குழந்தையை அனைத்துக் கொண்டே போய்த் தொட்டிவிடுகின்றாள். குழந்தை கிடைத்த விதத்தைக் கணவர் சொல்லச் சொல்ல அவளுடைய பக்தியும் அதிகரிக் கின்றது. அந்தத் தெய்வக் குழந்தையின் அழகை அள்ளி அள்ளிப் பருகுகின்றதை பிள்ளைக் கலிதீர்க்க இந்தப் பெண் கனியைப் பெருமாளே நமக்கு அளித்துள்ளார்!’ என்று எண்ணி எண்ணி அந்தக் குழந்தையை நோக்க நோக்க அவள் உள்ளத்தில் உவகை புதிதுபுதிதாகப் பொங்கி வழிகின்றது. விஷ்ணு சித்தரும் நாம் உய்யும் பொருட்டே இந்த அற்புதக் குழந்தையை எம்பெருமான் நமக்கு அளித் துள்ளான்' என்று ஆனந்த பரவசராகின்றார். இருவரும் அந்தக் குழந்தைக்குக் கோதை என்று திருநாமம் சூட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வருகின்றனர். ஆழ்வாரும் மலர்த் .ெ த ண் ைட த் தொடர்ந்து செய்து வருகின்றார். விஷ்ணு சித்தர் எண்பத்தைந்து திருநட்சத்திரங்கள் வாழ்ந்தவர் என்று குருபரம்பரைகளால் அறிய முடிகின்றது. இவர் பரமபதித்தது பூரீவில்லிபுத்துரரில். .