பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பரத்துவ நிர்ணயம் விஷ்ணுசித்தர் வில்லிபுத்துரரில் வாழ்ந்த காலத்தில் (8ஆம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட அரசன் ரீவல்லப தேவன் என்பதாக வைணவ ஆசாரியர்கள். குறிப்பிடு கின்றனர். இந்த அரசனை நெடுமாறன் என்று குறிப்பிடுவர் விஷ்ணுசித்தர். இந்தப் பாண்டியனைப் பராந்தகன் - நெடுஞ்சடையனின் தந்தையாகிய மாறவர்மன் என்று கருதுவர் பேராசிரியர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். இவன் காலத்தில் மதுரைக்கு விஷ்ணுசித்தரின் பாமாலை கிடைத்தது. இந்தப் பாமாலை பிறந்த இடம்தான் திருக் கூடல்' என வழங்கும் தென்மதுரையாகும். இந்தப் பாமாலைதான் திருப்பல்லாண்டு என்ற பிரபந்தம். இது நா த மு னி வர் அடைவுபடுத்திய நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் முதலாயிரத்தில் முதலாவதாக அமைந்துள்ளது. திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று: அது பெரியாழ்வார் திருமொழியில் அடங்கியதே என்று நிலை நாட்டுவோரும் உளர். இதனை அடுத்த (3-வது) கட்டுரையின் இறுதியில் எடுத்துக் காட்டுவேன். திருப்பல்லாண்டு என்ற பாமாலை கூடலழகர் விஷய 1. வேதாந்த தேசிகர்; பிரபந்த சாரம்.1, 9. பெரிய வாச்சான் பிள்ளையும் இக்கொள்கையினர். 2. கூடலழகர் கோயில் மங்கம்மாள் சத்திரத்திற்குத் தென் திசையில் டி. வி. எஸ். தொழிற்சாலைக்குக் கிழக்கில் உள்ளது. -