பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விட்டு சித்தன் விரித்த தமிழ் மாக ஏற்பட்டதாகப் பெரியோர் பணிப்பர். இதுதான் வரலாறு, மதுரை மாநகரில் பூர்வல்லபனின் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அவன் பல இரவுகளில் மாறுவேடம் பூண்டு நகர் சோதனை செய்து குடிமக்களின் சுக துக்கங்களை நேரில் அறிந்து வருகின்றான். அவர் களுடைய தேவைகளைத் தெரிந்து அவற்றை வழங்க வேண்டும் என்று சிந்திக்கின்றான். வழக்கமாக இங்ானம் சுற்றி வந்து கொண்டிருந்தபொழுது ஒர் இரவு அவன் ஒரு தெருத் திண்ணையில் யாரோ ஒருவன் உறங்கிக் கொண் டிருப்பதைக் காண்கின்றான். அவனை ஐயுற்று எழுப்பி, தாங்கள் யார்? தங்கள் இருப்பிடம் யாது? இங்கே ஏன் இப்படிக் கிடக்கின்றீர்கள்? உங்கள் நோக்கம் தான் என்ன?” என்று கேட்கின்றான். அதற்கு அவன், ஐயா, நான் ஒர் திருத்தலப்பயணி. கங்கையாடித் திரும்புகின்றேன். பூர்வல்லபர் தல்லாட்சியில் மதுரை அடைந்திருக்கும் சிறப்பை யும் அழகையும் பார்த்து விட்டு குமரியாடப் போகின்றேன்; சேதுவையும் தரிசிக்க வேண்டும் என்பது என் திட்டம்’ ’ என்று மறுமொழி பகர்கின்றான். அன்றோ முழு மதியம் காயும் இரவு. சந்திரன் தலைக்கு தேரே உச்சியில் வந்திருந்த சமயம். நிலவொளியில் திருத் தலப் பயணியின் முகப் பொவிவைக் கண்ணுறுகின்றான் அரசன், அதனால் மிகவும் கவரப்பெறுகின்றான். இவன் திருத்தலப் பயணத்துடன் சாத்திரப் பயணமும் செய் திருப்பவன்' என்று அறுதியிட்டு பெரியீர் ஆன்ம வாழ்க்கைப் பயணத்திற்கு வழி கண்டிருப்பின், அதனை அடியேனுக்குக் காட்டியருள வேண்டும்" என்று கேட் கின்றான் மாறுவேடத்துடன் வந்திருந்த மதுரை மன்னன். அந்தத் திருத்தலப் பயணி மனமுவந்து வடமொழிச் சுலோகம் ஒன்றினைக் கூறுகின்றான். அதன் பொருள் : *இரவில் வேண்டிய உணவு முதலியவற்றைப் பகலில் தேடிக்