பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரத்துவ நிர்ணயம் #3. குறிப்பிட்ட நேரமும் வருகின்றது. உண்மை காண வேண்டும் என்ற ஆவலுடன் அரசன் அத்தானி மண்டபத்தில் வீற்றிருக்கின்றான். அவனுக்கு அருகில் செல்வநம்பி முதலிய வேத விற்பன்னர்களும், அமைச்சர் பெருமக்களும் ஆசனங்களில் அமர்ந்திருக்கின்றனர். சமய வாதிகள் என் சமயம் உயர்ந்தது; உன் சமயம் தாழ்ந்தது" என்று வாதப் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். நூலறிவு மட்டும் பெற்று நுண்ணறிவில்லாத கற்றுத் துறைபோய' வித்தகர்கள் அந்த நூல் மேலானது; இந்த நூல் மேலானது' என்று தம் தொண்டை கிழிய விவகரிக் கின்றனர். நுண்ணறிவும் அறிவுக் கூர்மையும் உள்ள புலவர் மணிகள் எதிர்வாதங்களைக் குத்திக் கிழித்தெறிகின்றனர். அளவை நூல் வல்லார்கள் எதிரிகளை மடக்கித் தலை குனிய வைக்கின்றனர். சில வித்துவ சிரோமணிகள் யுக்தி வாதங்களாலும் தம் அநுபவத்தையொட்டிய வாதங் களாலும் வேத சாத்திரங்களையே அடித்துத் தள்ளு. கின்றனர். சில அறிஞர்கள் வாழ்வின் நிலையாமையை வற்புறுத்துகின்றனர். நாத்திகர்கள் :கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; இம்மையில் துய்ப்பதுதான் இன்பம்! மறுமையென்பது வீண் கனவு - குருமார்களின் சூழ்ச்சி' என்று தூசு கிளம்பப் பேசுகின்றனர். அரசன் களைப்புற்ற வனாய்ப் பெருமூச்சு விடுகின்றான். செல்வநம்பியோ ஐயோ! இன்னும் விஷ்ணு சித்தர் வரவில்லையே! என்று ஏங்குகின்றார். இதற்கு முந்திய நாள் இரவு வில் லிபுத்துரர் எம் பெருமான் விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றி விஷ்ணு சித்தரே, மதுரை சென்று பரத்துவத்தை நிலை நிறுத்திப் பொற்கிழியை அறுத்து வாரும்' எனப் பணிக்கின்றான். விஷ்ணு சித்தரும் எம் பெருமான்மீது பாரத்தைப் போட்டுப் பாண்டியன் அனுப்பிய பல்லக்கில் மதுரைக்கு எழுந்தருள் கின்றார். மு ன் ன ரே தொடங்கிய சமயசண்ட மாருதங்கள், தருக்கக் குடாரங்கள், ஆபாச நிரசனங்கள் ,