பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விட்டு சித்தன் விரித்த தமிழ் இந்நிலையில் வேத ஆகம இதிகாச புராணங்களில் வல்லுநரான செல்வகம்பி என்னும் அரச புரோகிதர் மன்னனுடன் கலந்துரையாடி அவன் மனக்குறையை அறிந்து கொள்ளுகின்றனர். தத்துவ ஞானியான பரம பாகவதோத்தமர் ஒருவரை ஞான குருவாகக் கொண்டு ஒழுகுவதுதான் இம் ைம யி லே மறுமைக்கும் உரிய செல்வத்தைத் தேடிக் கொள்ளும் வழி என்று யோசனை கூறுகின்றார். வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு குறிக்கோள் பொருளையும் (புருஷார்த் தங்கள்) அளிக்க வல்ல பரதத்துவத்தை அறுதியிடும் வழியை ஆராய்கின்றனர். இறுதியில் பொன்னும் மணியு மாக அளவற்ற பொருளை ஒரு சீலையில் முடிந்துக் கட்டி அந்தப் பொற்கிழியை அரசவையின் தோரண வாயிலில் தொங்க விடுகின்றனர். சாரமான சமய உண்மையைச் கருதி, சுமிருதி, ஆகமம், யுக்தி முதலிய பிரமாணங்களால் மெய்ப்பிக்கும் பெரியோருக்கு அக் கிழி உரியது என்று பறை .யறைவித்து நாடெங்கும் அறிவிக்கின்றனர். இந்த அறிக்கையைக் கேள்வியுற்று குறிப்பிட்ட நாளில் வேத வேதாங்க வேதாந்தங்களில் வல்லவர்களான வித்துவான்களும், சமண பெளத்தம் முதலான புறச் சமயங் களைச் சார்ந்த பண்டிதமணிகளும், அளவை நூல் (தர்க்கம்) வல்லுநர்களும், பல்வேறு கலைகளில் பயிற்சி புள்ளவர்களும், ஆத்திகர்களும், நாத்திகர்களும் மதுரையில் திரள்கின்றனர். பணத்தில் பற்றற்றவர்களும் வாதப் பிரதி வாதங்களில் ஆசை கொண்டு வருகின்றனர். அரசனும் அமைச்சர்களும் நாடு முழுவதும் திரண்டு வந்துள்ள விருந்தினர்களைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். பொதுமக்களும் இந்தப் பரத்துவ நிர்ணயத்தைக் காண ஆசைப்பட்டு வந்து கூடுகின்றனர். செல்வநம்பி மட்டிலும் அவர் வருவாரோ, வரமாட்டாரோ?" என்ற ஐயத்துடன் ரீவில்லிபுத்துரைத் திசை நோக்கித் தொழுத வண்ணம் துடித்துக் கொண்டு இருக்கின்றார்.