பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விட்டு சித்தன் விரித்த தமிழ் தியானத்திற்கு உரிய இறைவன்' என்றார். அந்தப் பரம் பொருளே நாராயணன் என்றும், அவனைச் சரணமடைவதே வீடுபேறு அடைவதற்குரிய வழியென்றும் விரிவாக விளக்கு கின்றார், விஷ்ணுவின் அவதார மூர்த்திகளும் வழிபடுவதற்கு உரியவை என்றும் எடுத்துக்காட்டுகின்றார். கண்ணன் வழி பாடு சிறந்தது என்று விளக்குகின்றார். எம்பெருமானை நோக்கி வழிபடுவதும் அவனுடைய ஆயிரம் நாமங்களை நாவினால் நவிற்றுவதும் பக்திப் பெருநெறியில் எளிதாகக் கொண்டுசேர்க்கும் என்றும், அந்தப்பக்தி நெறியே முத்தியில் கொண்டு சேர்க்கும் பெருநெறி என்றும் மெய்ப்பிக்கின்றார். கமலைக் கேள்வனுடைய கருணையைக் கணக்க நம்பியிருந்த அவருக்குச் சாத்திர உண்மைகள் யாவும் அங்கை நெல்லி யாகத் தெளிவாகின்றன. அவனுடைய திருவருளால் இதர சமயக் கொள் கையெல்லாம் சுருதி, சுமிருதி, இதிகாசம், புராணங்களின் துணையாலும் தமது யுக்தியாலும் மறுத்துத் தமது கொள்கையினை இன்னதென அறுதியிட்டு உணர்த்து. கின்றார். விஷ்ணுசித்தர் சொன்னவற்றையெல்லாம் அரசன் மிக உன்னிப்பாகக் கேட்கின்றான். சாந்த சொரூபமான அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே அந்தச் சொற்களைச் செவிமடுப்பது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கின்றது. விஷ்ணுசித்தர் அரசனை நேராகப் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் அவரது கண்களால் ஈர்க்கப் படுகின்றான்; அவரையே நோக்கிய வண்ணம் இருக் கின்றான். இரண்டொரு சமயங்களில் அவர் அரசனுடைய முகத்தை நேராகப் பார்த்துப் பேசும் சந்தர்ப்பங்களும் இருந்தன. அப்போது அந்த ஆச்சரியமான திருக்கண் களின் சக்தியை அவனால் தாங்க முடியவில்லை; தலை குனிந்த வண்ணம் அவரது திருவடிகளையே நோக்கிய வண்ணம் கேட்டுக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகின்றது. இறுதியாக அவன் நிமிர்ந்து நோக்கியபோது, அவர் தோரணவாயிலை நோக்கிக் கைகளை நீட்டிக் கொண்டு