பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரத்துவ நிர்ணயம் 17 எல்லா வேதப் பொருள்களும் வேதாந்தத்தில் அடங்கி, அந்த வேதாந்தம் பரம்பாகவதர்களுன் டய ஞான பக்தியில் அடங்கியுள்ளது. ஞானபக்தியே இமீன்மிக்கும் மீறுமைக்கும் உறுபெருஞ் செல்வம் என்று சொல்லி முடிக்கின்றார். அப்போது அந்த வர்சலில் கிழியர்க்க் கட்டியிருந்தி பொருள் அப்படியே அவரை நோக்கி விளைந்த்தைக் கண்ணுறு கின்றான் பாண்டியன். உடனே எழுந்து அந்தக் கிழியை அறுத்து அவரது திருவடிகளில் வைத்து வின்ங்குகின்றான். அப்பால் அங்குக் குழுமியிருந்த பாவலரும் நாவலரும், வேத விற்பன்னர்களும் ஆகமப் புலவர்களும் தமது கல்விச் செருக்கை மறந்து விஷ்ணுசித்தரின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றனர். * இந்த வரலாத்தைப் பிற்கச்ல் ஆசிரியர்களில் ஒருவர்ர்ன் அன்டிய பட்டர் என்பார், பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்(று) ஈண்டிய சங்கம் எடுத்து த - வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று." |சண்டிய.திரண்ட, சங்கம். சங்கு; பற்று-புகலிடம்; யாமுடைய பற்று.நம்முடைய புகலிடம், ! என்று குறிப்பிடுவர். இந்த ஆசிரியரே இன்னொரு வெண்பாவினால் விஷ்ணுசித்தர் கிழியறுத்த வரலாற்றை வைணவர்களின் நினைவில் நிலை பெறச் செய்துள்ளார். 4. திருப்பல்லாண்டு-தனியன். வி.2