பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விட்டு சித்தன் விரித்த தமிழ் ரண்டு பாசுரங்கள் உள்ளன. பல்லாண்டு, பல்லாண்டு’ என்று தொடங்கும் முதற் பாசுரத்தைப் பல்லவிபோல் ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துப் பாடுகின்றனர். இரண்டாவது பாசுரத்தில் ஆழங்கால் படுவோம். அடியோ மோடும்.கின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு: வடிவாய் நின்வல் மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு; வடிவார் சோதி வலத்துறை பும்சுட ராழியும் பல்லாண்டு; படையோர் புக்கு முழங்கும்அப் . . . பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு. (2} |மங்கை - பெரிய பிராட்டியார்; புக்கு - புகுந்து: முழங்கும் . ஒலிக்கும்; அ - அளவற்ற பெருமைகை; புடைய) - . . . . என்பது பாசுரம். அடியவர்களான நாங்களும் எல்லோ ருக்கும் தலைவரான தேவரீரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் நெடு நாளளவும் மங்களமாக வாழவேண்டும்; பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்திய வாழ்க்கை செல்ல வேண்டும்; திருவாழி வாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேண்டும் - என்று உபய விபூதிகளோடும் கூடின. நிலைமைக்கு மங்களாசாசனம் பண்ணுகின்றார். அடியோ மோடும்" என்பதில் இந்த லிலா விபூதியிலுள்ள அனைவரும் அடங்குவர். மற்ற மூன்றடிகளிலாலும் பரமபதமாகிய நித்திய விபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர் களும் அடங்குவர். ஆக, இப்பாசுரத்தால் உபய விபூதிக்கும் தலைவனான எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடு கின்றார் என்பதை அறிதல் வேண்டும். -