பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிய பட்டர் பிரான் 21 வருமோ?" என்று அஞ்சியவர்போல் யானைக் கழுத்தின் மேல் கிடக்கும் மணியையே கைத்தாளமாகக் கொண்டு பல்லாண்டு பாடத் தொடங்குகின்றார். பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் என்று ஆனந்தக் கண்ணீர் அருவி சோரப் பாடல் வெளிப் படுகின்றது. பல்லாண்டு என்று ஒரு தடவை சொன் அளால் போதாதா? பல்லாண்டு, பல்லாண்டு என்று இரு தடவையும் பல கோடி நூறாயிரம், பல்லாண்டு என்றும் ஆசை திரப் பாடுகின்றார் - தாகவிடாய் உள்ளவன் "தண்ணீர், தண்ணிர் என்று கூறுவது பேர்லே. அதிக அச்சத்தால் இங்ங்ணம் மங்களாசாசனம் பண்ணுகின்றார் என்பதை யறிந்த் கம்பெருமான், திண்மை வாய்ந்த தன் தோள்களைக் காட்டியருள்கின்றான். அச்சந் தீரக் காட்டிய தோள் அழகு ஆழ்வாரின் அச்சம் அதிகரிக்கவே காரணம் ஆகின்றது. ஆகவே, மீண்டும் மங்களாசாசனம் செய்து பல்லாண்டு பாடுகின்றார். - . -- பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்டோள் மணிவண்ணாஉன் சேவடி செவ்வி திருக்காப்பு திசெவ்வி . அழகு; திருக்காப்பு . குறைவற்ற காவல் ஏற்படுவதாகும்.) என்பதாக. உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று திருவடிக்கு மாத்திரம் மங்களாசாசனம் இருந்தாலும் இது திருமேனி முழுமைக்கும் மங்களாசாசனம் பண்ணின தாகும். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு" என்கின்றார். இந்த மங்களாசாசனப் பதிகத்தில் பன்னி