பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விட்டு சித்தன் விரித்த தமிழ்: வேதப் பயன் கொள்ளவல்ல விஷ்ணு சித்தர் வந்தார்: வில்லிபுத்துர் வேதக்கோன் வந்தார்! விஷ்ணுசித்தர் வாழ்க! பட்டர்பிரான் வாழ்க! என்ற வாழ்த்தொலிகள் விண்ணை முட்டிய வண்ணம் உலா புறப்படுகின்றது. ஆகாய வீதிகளிலும் தேவர்கள் கூட்டம் கூட்டமாக வத்து வாழ்த்துகின்றனர். இந்திரன், நான்முகன், சிவபெருமான் முதலியோரும் அந்தக் கூட்டத்தில் காட்சி ஆணிக்கின்றனர். அந்தக் கூட்டித்தினிடையே ஆயிரம் சூரியர்கள் ஒரே காலத்தில் கூடியிருப்பதுபோல் ஒரு பெருஞ். சோதி சுடர் விட்டுத் தோன்றுகின்றது. மகனுடைய விழாவைக் காண வரும் பெற்றோர்போல பரமபததாதன் பிராட்டிமாருடன் பெரிய திருவடிமீது திருவாழி திருச் சங்குடன் தோன்றியதே அச்சோதி வெள்ளத்திற்குக் காரணமாகும். இந்த அருள் வெள்ளத்தைச் சேவித்ததும் விஷ்ணுசித்தரின் பரமபக்தி பாட்டாக வெளிப்படுகின்றது. அந்தத் தேவாதி தேவனுடைய சர்வ சக்தத்துவம் முதலிய திருக்குணங்களை அதுசந்திப்பதற்கு முன்ன்ே செளந்தரியம் (அழகு), செளகுமார்யம் (இளமை), செளலப்பியம் (எளிதாகப் பழகுதல்), ச்ெளல்ேயம் (புரையறக் கலத்தல்) முதலிய திருக்குணங்களில் கன் செலுத்தி அவற்றையே ச்ேவித்து ஈடுபட்டு ஆழ்ந்து பக்திக் பரவசராகின்றார் விஷ்ணுசித்தர். .. - இதனால் தம்முடைய நிலையையும் எம்பெருமானு: டைய நிலையையும் மறந்து, காலம் நடையாடாத் பரமபதத்திலிருக்கும் எம்பெருமானின் சேர்த்தியழகு. (லாவண்யம்) காலமும் அசுர சக்திகளும் நடையாடுகின்ற இருள் தருமா இவ்வுலகில் வ்ந்து நிற்கின்றதே. பாவிகளின் கண்ணெச்சில் பட்டு எம்பெருமானுக்கு என்ன இங்கு