பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் விஷ்ணுசித்தரின் பரத்துவ நிர்ணயம் கற்றோர்க்கும் ஆமற்றோர்க்கும் பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. பாண்டிய மன்னன் தன் அமைச்சர்களையும் அரச புரோகிதர் செல்வ நம்பியையும் கலந்து யோசித்து விஷ்ணுசித்தரின் வெற்றி யைக் கொண்டாடும் வகையில் ஒரு பெரு விழா எடுக்கின்றான். மதுரை மாநகர் முழுவதும் விழாக் கோலம் கொள்ளுகின்றது. அரசன் அரண்மனையில் கற்றவர்களின் அவையைக் கூட்டி, கற்றவர்கள் அனை வர்க்கும் தலைவராய்த் திகழும் விஷ்ணுசித்தருக்குப் பட்டர்பிரான் என்ற விருதை அளித்துப் பாராட்டுகின்றான். கற்றவர்கள் இதனை ஆதரித்துக் கையொலி எழுப்பு கின்றனர். ... : - - பின்னர் விஷ்ணுசித்தரைப் பட்டத்து யானையின் மீது ஏற்றி நகர்வலம் செய்விக்கின்றான். மதுரை மக்களுக்கு அந்த நாள் ஒரு பெரு விழாவாக அமைகின்றது. வீடு களிலும், வாசல்களிலும், தெருக்களிலும் திரண்ட மக்கள் *விஷ்ணுசித்தர் வாழ்க!" என்ற வாழ்த்தொலியை எழுப்பு கின்றனர். ஊர்வலத்தில் திருச்சின்னமும் சங்கமும் கம்பீரமாக ஒலிகளை எழுப்புகின்றன. மங்கல வாத்தி யங்கள் அதிர்கின்றன. வெண் கொற்றக்குடை நிழற்றி, இருமருங்கும் கவரிகள் வீச, யானைமீது இவர்ந்து வரும் விஷ்ணுசித்தர் நகர்வலம் வரும்போது வித்துவான்கள் கட்டியம் கூறுகின்றனர். மக்கள் தரள்களிடமிருந்து -