பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விட்டு சித்தன் விரித்த தமிழ் யார்த்திகளாலும்: *அல்வழக் கொன்று மில்லா (11) என்ற பாசுரம் ஐசுவர்யார்த்திகளாலும் எம்பெருமானை தேரே நோக்கிச் சொன்னவையாகும். இவற்றுள் 7, 8 ஆம் பாசுரங்களில் எம்பெருமானுடைய விளி தெளிவாக உள்ளது. 9.வது பாசுரத்தில் அப்படித் தெளிவாக இல்லா விடினும் கின்தேக ஆடை என்கின்ற சொல்லாற்றலால் தெளிவாகின்றது. - - முதலில் பயன்கருதாத ஞானிகள் எம்பெருமானை நோக்கிப் பேசுகின்றனர். உடுத்துக் களைந்தகின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்.இத் தொண்டர்களோம் விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில் படுத்தயைந் நாகனைப் பள்ளி கொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9) (உடுத்து-அரையில் சாத்தி பீதக ஆடை-பீதாம் பரம்: கலித்தது-மிகுந்திருப்பது; திருத்தி-ஒழுங் காகச் செய்து; திருவோணம்-(ஒரு நட்சத்திரம்.)] இந்தப் பாசுரத்தில், எம்பெருமானே! நாங்கள் எங்களுக் . கென்று சோறு, கூறை, மலர், சாந்தம் முதலான வற்றை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதில்லை; தேவரீர் அதுபவித்துக் கழித்தவற்றை மகாப் பிரசாதமாகக் கருதி அவற்றையே உண்பதும், உடுப்பதும், குடுவதும் செய்வோம்; அவ்வளவோடும் நில்லாமல் தேவரீருக்கு எந்தத் திக்கில் என்ன காரியம் ஆகவேண்டியிருந்தாலும் அவற்றை ஒழுங்குபடச் செய்து முடிப்பதும் எங்கள் கடமை யாகச் செய்வோம். இதிலும் மனநிறைவு கொள்ளாமல், ஒரு வெள்ளி மலையில் காளமேகம் படிந்து கிடப்பது