பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.பல்லாண்டு பாடிய பட்ட்ர்பிரான் 35 போல் திருவனந்தாழ்வான் பள்ளியிலே தேவரீர் பள்ளி கொண்டிருக்கும் கிடந்த திருக்கோல அழகுக்குப் பல்லாண்டு பாடுவதும் செய்வோம்' என்கின்றனர் பயன் கருதாத ஞானிகள். பீதக ஆடை, பீதம்' என்னும் வடசொல் க’ என்ற விகுதி பெற்றுப் பீதகம் என்றாயிற்று. பொன் நிறமான ஆடை என்பது இதன் பொருள். எம்பெருமான் திருவரை யில் சாத்திக் கொள்ளும் சாதாரண ஆடையெல்லாம் திவ்விய பீதாம்பரத்தின் அம்சமே என்பது சாத்திரம். அடுத்து ஆன்மாநுபவத்தையே அடையப்படும் பொரு ளாகக் கொண்டுள்ள கைவல்யார்த்திகள் தாம் திருந்தின படியைச் சொல்லிக் கொண்டு எம்பெருமானை நோக்கி மங்களாசாசனம் செய்வதாகச் சொல்லுகின்றனர். எந்நாள் எம்பெரு மான் உன் தனக்கடி யோம்என்றெழுத்துப்பட்ட அங்கா ளே அடி யோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்தது.காண் செந்நாள் தோற்றித் திருமது ン ' v ரையுட் சிலைகுனித்து ஐந்தலைய பைங்கா கத்தலைப் பாய்ந்தவ னே!உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10) (உன் தனக்கு - தேவரீருக்கு: எழுத்து - சொல்; பட்ட நாள்.வாயில் உண்டாகப் பெற்றநாள்; அடி குடில்-அடிமைப்பட்ட சந்தானம் எல்லாம்; வீடு. நற்கதி; செம் நாள்-நல்ல நட்சத்திரம்; தோற்றி. அவதரித்து; சிலை-வில்; குனித்து.வளைத்து: பாய்ந்தவன்.குதித்தவன்.1 என்பது பாசுரம், இதில் கைவல்யார்த்திகள் களம் பெருமானே, நாங்கள் கைவல்ய புருஷார்த்தம் அடைவ தற்குச் சாதகமாக ஒம் நம: முதலிய சொற்களை