பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விட்டு சித்தன் விரித்த தமிழ் தாவினால் தவிற்றிக் கொண்டு தேவரீரைத் தோத்திரம் செய்தோம். தேவரீர் எங்களைக் கடைக்கண் நோக்கி தாங்கள் மீட்சியற்ற கைவல்யத்தை அடைந்து கெட்டுப் போகாமல் அருள் புரிந்து நல்லறிவை புண்டாக்கின படியால் அடியோங்கள் இப்போது திருந்தி தேவரீருக்குப் பல்லாண்டு பாடுகின்றவர்களாக ஆய்விட்டோம்' என் கின்றனர். . தேவரீருக்கு அடியோம் என்று எழுதப்பட்ட தாள் எந்நாளோ, அந்நாளிலேயே அடியோங்களின் குடில் உய்ந்து போயிற்று என்பது நைச்சியாது சந்தானப் பேச்சு. இவர்களை அடுத்து ஐசுவர்யார்த்திகள் தாங்கள் திருத்தின படியைச் சொல்லிக்கொண்டு எம்பெருமானை மங்களா சாசனம் செய்கின்றனர். எப்படி? அல்வழக் கொன்றும் இல்லாஅணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன் கல்வகை யால்கமோ காரா - யனாவென்று காமம் பலபரவி பல்வகை யாலும் பவித்திர னே!உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (1 1} அல்வழக்கு.அநீதிகள்; அணி.அழகிய; கோன். தலைவர்; அபிமானதுங்கன்.வைணவ அபிமானத் தால் சிறந்தவர்; பவித்திரம்.பரிசுத்தம்; பரவி. ஏத்தி.1 என்பது பாசுரம், இதில் ஐசுவர்யார்த்திகள் எண்ணிறந்தவர் களாதலால், அவர்களில் ஒருவன் சொல்லுகின்றனனென்று அறியத்தக்கது. கெய்யடை (8) என்ற பாசுரத்தில், ஆசுறுவனே என்று ஒருமைவினை வந்துள்ளதுபோல் இதில்