பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விட்டு சித்தன் விரித்த தமிழ் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே" (12) என்று பயன் உரைத்துப் பதிகத்தைத் தலைக்கட்டுகின்றார். பல்லாண்டு பாடிய பட்டர்பிரானும் பெரியாழ்வார்’ என்னும் ஒரு புதிய திருநாமம் பெற்று வைணவ ஞானச்சுடர் களான பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராகத் திகழ் கின்றார். மற்றைய ஆழ்வார்களும் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்துள்ள போதிலும், அவர்கள் பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கும் மங்களம் என்று செய்துள் அார்கள். ஆனால், விஷ்ணுசித்தரோ சர்வ இரட்சகனை யும் இரட்சிக்க வழிதேடித் தடுமாறுவதுபோல் திருப் பல்லாண்டு பாடியுள்ளார். எம்பெருமானுடைய வாழ் வையே தமது வாழ்வாக நினைத்துப் போற்றியுள்ளார். இந்த முறையில் இவர் ஏனைய ஆழ்வார்களினும் பெரியாராதவின் பெரியாழ்வார் என்று திருநாமம் பெற்றார் என்பது மணவாள மாமுனிகளின் திருக்குறிப்பு. மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள்ஆன் வத்தளவு தான் அன்றிப் - பொங்கும் பரிவாலே வில்லிபுத்துர்ப் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்.' fஆர்வத்து அளவு-நிறைந்த அன்பின் அளவு; பரிவு. இரக்கத்துடன் கூடிய பேரன்பு; . . என்பது பாசுரம். ஆழ்வார்களுக்குரிய ஆர்வத்தையும் மிஞ்சிப் பொங்கிய பரிவல் பல்லாண்டு பாடிய காரணமாக விஷ்ணு சித்தருக்குப் பெரியாழ்வார்: என்ற பட்டம் கிடைத்தது 1. . உபதேச ரத்னமாலை-18.