பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் 39 என்பது மாமுனிகளின் கருத்து. இராமாதுச நூற்றந்தாதி அருளிய திருவரங்கத்தமுதனாரும் இதனை, சோராத காதல் பெருஞ்சுழிப் பால்தொல்லை மாலையொன்றும் பாரா தவனைப்பல் லாண்டென்று காப்பிடும் பான்மையன்." (சோராத.ஒரு நாளும் குறையாத காதல்.பிரேமம்: தொல்லை மாலை.நித்தியனான எம்பெருமானை: ஒன்றும் பாராது.சிறிதும் மெய்ப்பிக்காமல்; காப்பிடும்.மங்களா சாசனம் செய்யும்; பான் மையன்-இயல்பையுடையவன்.1 என்று குறிப்பிடுவர். :பிரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே நித்தியனான எம்பெருமான் நிலையைச் சிறிதும் மெய்ப்பிக்காமல் பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணுதலையே இயல்பாகவுடைய விஷ்ணுசித்தன்' என்பது அமுதனாரின் பாராட்டு. பல்லாண்டு பாடிய பெரியார் தாம் வளர்த்த அன்பு மகளை எம்பெருமானுக்கு மணாட்டியாக அளித்து 'இறைவனுக்கும் மாமனார் என்ற மதிக்கப்பெற்ற குறிப்பும், தாயுள்ளம் கொண்டு தம் அழகுத் தெய்வமாகிய கண்ணனைத் தமது பாவனையாலேயே தமது திருமொழியில் வளர்த்துவிட்ட குறிப்பும் பெரியாழ்வார் என்ற பேரிலும் புகழிலும் புதை பொருளாக அமைந்துவிட்டதைக்கண்டு மகிழலாம். பாண்டிய மன்னன் அளித்த பட்டர்பிரான் என்ற விருதைவிட இத்திருநாமம் புகழ் பெற்று விட்டது. குருபரம்பரையில் இவர் வரலாற்றிற்குப் பெரியாழ்வார் வைபவம் என்றும், நாலாயிரத்தில் இவர் பாசுரங்கட்குப் 2. இராமாதுச. நூற். 15.