பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ விட்டு சித்தன் விரித்த தமிழ் பெரிaாழ்வார் திருமொழி' என்ற தலைப்பும் அமைந்து அப்புகழ் நிலைபெற்றும் விட்டது. பல்லாண்டு அருளிய பெரியார்மூலமாக வில்லிபுத்துளர் மதுரைக்கு வழங்கிய செல்வம் வைணவர்களில் பொது உடைமையாகிப் பக்தி நெறிக்கே ஒரு புதிய அழகினையும் பொலிவினையும் தந்து நிற்கின்றது. -

  • உண்டோ திருப்பல்லாண்டுக்(கு)

ஒப்பதோர் கலைதான்? உண்டோ பெரியாழ்வார்க் (கு) ஒப்ப ஒருவர்?" என்று வைணவ உலகம் இன்றும் பல்லாண்டு பாடிய பட்டர்பிரானை வியந்து பாராட்டுகின்றது; போற்று கின்றது. . . பெரியாழ்வார் தம்மைச் சரணமடைந்த பாண்டியக் குலபதியைக் குளிரக் கடாட்சித்துப் பாகவதர் குழுவில் ஒருவனாக்கி விடுகின்றார். பின்னர் வில்லிபுத்துார்க் கெழுந்தருளி கிழியிற்கிடைத்த பொருள்களையெல்லாம் வடபெருங்கோயிலுடையான் திருமுன்பே வைத்துத் தெண்டன் சமர்ப்பிக்கின்றார். அந்தப் பொருளைக் கொண்டு அத்திருக்கோயிலுக்குக் கோபுரம் எழுப்புகின்றார். பின்னர், பழையபடியே நந்தவன கைங்கரியம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டு அவ்வவதார சரிதைகளையே முக்கியமாகப் பாராட்டி அநுபவித்து அவ்வநுபவத்தாலுண்டான ஆனந்தத்திற்கு போக்கு வீடாக அதைப் பிரபந்தமுகமாக வெளியிடுகின்றார். இந்தப் பாசுரங்களே பின்னர் நாத முனிகள் அடைவுபடுத்திய நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி என்று முதலாயிரத்தில் இடம் பெறுவதாயிற்று. . - - ... 3. உ. ர. மா: 20.