பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விட்டு சித்தன் விரித்த தமிழ் இந்த இரண்டு பதிப்புகளிலும் (இரண்டு சம்பிரதாயங் களிலும்) திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொண்டவர்கள் தென்கலையார் என்றும், திருப்பல்லாண்டு தனிப்பிரபந்தம் அன்று, அது பெரியாழ்வார் திருமொழியில் முதல் பத்திலேயே அடங்கிவிடுகின்றது என்பது வட கலை யார் கொள்கை என்றும் நாம் கொள்ள வேண்டி புள்ளது. இது அடியிற்கண்டவற்றால் தெளிவாகும். திவ்வியப் பிரபந்தங்களின் எண்ணிக்கையும் பாசுரங் களின் எண்ணிக்கையும் வேதாந்த தேசிகர் காலத்தில் வரையறுத்துக் கூறப் பெற்றவை. ேத சி க ர் திருப் பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொள்ளவில்லை. அது பெரியாழ்வார் திருமொழியுடன் சேர்ந்தது என்ற சம்பிரதாயத்தை அப்படியே ஒப்புக் கொண்டவர். ஏறணிபல் லாண்டுமுதல் பாட்டு நானூற் றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவுநீயே.* - நீரர் அணி.அழகு பொருந்திய, நானுாற்றெழுபத் தொன்று இரண்டு.473). என்று சேர்த்தே ஒரே தொகையாகக் கூறியிருப்பதனால் இதனை அறியலாம். அவர் தமது பிரபந்த சாரத்தில் மேற் கொண்டுள்ள முறையைக் கவனித்தால் இது தெளிவாகும். இந்த முறை பிரபந்தசாரம் முதல் பாடலில், - வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகைஇலக்கம் மற்றும் எல்லாம்." fவாழ்வான-உய்வதற்குக் காரணமான பாட்டின் ఖిf శ& ! TశF தொகை-பாட்டின் வகுப்பின்படி எண்கள்; இலக்கம்.(அவரவர் அருளிச் செய்த பாசுரத்தின்) கூட்டிய எண்; மற்றும் எல்லாம். (அந்தந்த பிரபந்தங்களில் வெளியாகும் சாரப் பொருளாகிய) பிற எல்லாம் 1. தே. பி.375; பிரபந்தசாரம்-9. 2. டிெ. 367; டிெ.1. -