பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு-தனிப்பிரபந்தமா? 43. என்று பேசப்பெறுகின்றது. இதில் பாட்டின் வகையான தொகை என்பது பாட்டின் வகுப்பின்படி எண்கள்' என்பதைக் குறிக்கின்றது. இதனை மேலும் விளக்குவேன். திருமொழிகள்; அவற்றுள் ஒவ்வொன்றின் பாட்டின் தொகை இலக்கம் என்பதைக் கவனிக்க வேண்டும். எவ்விதமான தொகை: வகையாக. வகை என்பது தனிப் பிரபந்தம். அதிலுள்ள பாசுரங்கள் இத்தனை என்பது வகையாகத் தொகை இலக்கம். இலக்கம் என்பது அவரவர் அருளிச் செய்த பாசுரத்தின் கூட்டிய எண். மற்றுமெல்லாம்-வகை களை விட்டு ஒவ்வொரு ஆழ்வார் செய்த பாசுரங்களின் தொகை இலக்கம்; பிரபந்தங்களின் மொத்த இலக்கம்: எல்லாப் பிரபந்தங்களையும் சேர்த்து அவற்றிலுள்ள பாசுரங்களின் மொத்த இலக்கம். இவை எல்லாவற்றையும். விரித்துரைப்பதாகக் கூறுகின்றார். இந்த முறையை மேற்கொண்டு தமது பிரபந்தசாரம் இரண்டாவது முதல் பதினான்காவது வரையிலுமுள்ள பதின்மூன்று பாடல்களில் ஒவ்வோர் ஆழ்வார்களுடைய திரு மொழிகளையும் (அல்லது திருமொழியையும்) தனித்தனியே அதனதன் தொகை இலக்கத்தையும் கூறுகின்றார். அவற்றில் திருமழிசை பிரான், நம்மாழ்வார், ஆண்டான். தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார்இந்த ஐவர்களைப் பற்றின பாடல்களில் அவரவர் அருளிச் செய்த பிரபந்தங்களைத் தனித்தனியே எடுத்து, அவற்றின் தனித்தனித் தொகை இலக்கத்தைக் கூறியுள்ளார். திருமழிசை யாழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில் 96 பாசுரங்களும், திருசந்த விருத்தத்தில் 120 பாசுரங்களும் உள்ளன என்று கூறும் முறையில் பிரபந்தங்களின் தொகை இரண்டென்றும், அவற்றின் பாசுரங்களின் தொகை 96+120. = 216 என்றும் அறுதியிடுகின்றார், நம்மாழ்வாரின் திரு விருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங் 3. தே, பி. 371; பி. சா.5.