பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ - விட்டு சித்தன் விரித்த தமிழ் களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும், திருவாய்' மொழியில் 1102 பாசுரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுக் காட்டும் முறையில் அவர் அருளிய பிரபந்தங்கள் நான் கென்றும் அவற்றின் பாசுரங்களின் தொகை 100+7487+ 1102=1.195 என்றும் வரையறுத்துக் காட்டுகின்றார். கோதைப் பிராட்டியின் திருப்பாவையில் 30 பாசுரங்களும் நாச்சியார் திருமொழியில் 143 பாசுரங்களும் உள்ளன என்று எடுத்துக்காட்டும் முறையில் இவர் அருளிய பிரபந்தங்கள் இரண்டென்றும், பாசுரங்களின் தொகை 30+ i43:173 என்றும் உறுதி செய்கின்றார். தொண்டரடிப் பொடிகளின் திருமாலையில் 45 பாசுரங்களும் திருப்பள்ளி, எழுச்சியில் 10 பாசுரங்களும் உள்ளன என்பதைக் கூறும் முறையில் இவர் அருளிய பிரபந்தங்கள் இரண்டென்றும் பாசுரங்களின் தொகை 45 + 10=55 என்றும் உறுதி செய் கின்றார். இறுதியாக திருமங்கை மன்னனின் பெரிய திரு மொழியில் 1084 பாசுரங்களும், திருக்குறுந்தாண்டகத்தில் 20 பாசுரங்களும், திருநெடுந்தாண்டகத்தில் 30 பாசுரங் களும், திருஎழு கூற்றிருக்கையில் ஒன்றும், சிறிய திருமடலில் 40 (நூல் 38+ பிற்சேர்க்கை 2) பாசுரங்களும், பெரிய திருமடலில் 78 பாசுரங்களும் என்பதைக் காட்டும் முறையில் இவர் திருவாய் மலர்ந்தருளிய பிரபந்தங்கள் ஆறு என்றும், இவர் அருளிய பாசுரங்களின் தொகை 1984+20+38+1+40+78=1253 என்றும் அறுதியிட்டு உரைக்கின்றனர். இத்தொகையைப் பிரபந்தசாரத்தின் இன்னொரு பாடலிலும் அறுதியிடுகின்றார். இதனை, 4. டிெ 372; டிெ.6. 5. டிெ 376; டிெ 10, 6. டிெ 377; டிெ 11. 7. டிெ 379; டிெ 13,