பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ விட்டு சித்தன் விரித்த தமிழ் மொழிகள் தாமே உள்ளன. அதனைப் போலவே பத்துக்குக் குறைந்த ஒன்பது திருமொழிகளே உள்ள முதல் பத்தினை ஏன் பத்து’ என்று வழங்குதல் கூடாது?’ என்று: வினவலாம். பத்துப் பத்துத் திருமொழிகளாகப் பிரித்துக் கொண்டே போய் எஞ்சியுள்ள நான்கு திருமொழிகளை ஒரு பத்தாகக் கொள்வதற்கும், திவ்வியப்பிரபந்தத்தின் தொடக்கத்திலேயே அங்ங்ணம் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு, தான் வரையறுத்த கொள்கையை எடுத்த எடுப்பிலேயே எவரும் கைவிடார். தவிர, முழுப்பத்து: ஒன்றுக்குமேல் இருக்கும் இடங்களில்தான் ஒதுதல் முதலான வசதிகளைக் கருதித் திருமொழிகளைப் பத்துப் பத்தாகப் பிரித்தனர் என்பது கருதற்பாலது. ஆனால், பதினான்கு திருமொழிகளே உள்ள நாச்சியார் திரு. மொழியைப் பத்துப் பத்தாகப் பிரிக்காததற்குக் காரணம் முழுப் பத்து ஒன்றுக்கு மேற்படாதிருப்பதே காரணமாகும். என்பது ஈண்டு நினைத்தல் தகும். எனவே, திருப். பல்லாண்டு தனிப் பிரபந்தம் என்று கொள்வதற்கு ஏது. ஒன்றும் இல்லை. - - 3. பெரியாழ்வாரைப் பற்றிய பிரபந்த சாரப் பாசுரத்தில் (9) அவர் செய்த பிரபந்தம் இரண்டா விருத்தும் அவற்றைத் தனித் தனியே எடுத்துப் பாட்டு: களின் எண்ணிக்கை கூறப் பெறவில்லை. இரண்டின் மொத்த எண்ணிக்கையே கூறப் பெற்றிருக்கிறது' என்றால் அந்த நியமத்திற்குப் பங்கம் வரும். ஆகையால் திருப் பல்லரண்டு தனிப் பிரபந்தம் என்று கருதப் பெறவில்லை என்பது திண்ணம். ஒவ்வோர் ஆழ்வார் செய்த பாசுரங் களின் மொத்த எண்ணிக்கையைக் கூற வந்தவை பிரபந்த சாரத்தின் 15, 16 ஆகிய இரண்டு பாசுரங்களாகையால் அவற்றிற்கு முற்பட்ட பாசுரத்தில் அதற்குக் காரணமே. இல்லை என்பதையும் ஈண்டுக் கவனித்தல் வேண்டும். 4. திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் என்று தேசிகன் கருதினாரென்றால் அது பிரபந்த சாரத்தின் 17 ஆம்.