பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு-தனிப்பிரபந்தமா? 47 இந்த வரிசையில் இருக்க வேண்டிய முறையை வரையறை செய்து அடைவு படுத்தியவர் நாதமுனிகள். அவர் திருப் பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கருதியிருந்தால் வண்ண மாடங்கள் முதல் மெச்சூது முடிய பத்துத் திருமொழிகளைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கி பெரியாழ் வார் திருமொழி - முதல் பத்து என்று வகுத்திருக்க வேண்டுமேயன்றி ஒன்பது திருமொழிகளை வைத்துப் அபத்து என்று பெயரிடக் காரணம் எதுவும் இல்லை. அவர் அங்கனம் செய்யாமல் வட்டு நடுவே" என்ற திரு மொழியுடன் ஒரு பத்தாக்கியுள்ளார். திவ்வியப்பிர பந்தத்தில் பத்து என்ற பிரிவு இருக்குமறையில் மண்டலங் களின் உட்பிரிவுகள் வகுக்கப் பெற்றுள்ள மரபினை யொட்டியது. அங்கு அந்த உட்பிரிவுகள் ஸ் இக்தம் எனப் படுகின்றன. ஸ் இ க் த ம் (ஸல் + உக்தம் = திரு + மொழி) என்பதே தமிழில் திருமொழி என வழங்கப் பெறுகின்றது. 2. பல திருமொழிகளுள்ள பிரபந்தங்களே. பெரியாழ் வார் திருமொழி, காச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, பெரிய திருமொழி என்றிப்படி திருமொழி என்ற பெயர் பெற்றன. நம்மாழ்வார் ஆயிரமும் நம்மாழ்வார் திருமொழி என்றே கூறப் பெறலாமாயினும், அதன் சிறப்புத் தோன்ற *திருவாய் மொழி' என வழங்கப் பெற்றது என்பது ஈண்டு அறிதற்பாலது. எனவே, திருமொழி திருவாய் மொழி என்ற பெயர்கட்குக் காரணமான பெயரையுடைய திருமொழிகளின் தொகையைக் கொண்டு முதல் பத்து, இரண்டாம் பத்து - என்றிப்படி வரையறை ஏற்பட்டது என்பது தெளிவு. இம்முறையால் பெரியாழ்வார் திரு. மொழி முதல் பத்துக்கு. இரண்டாம் பத்து முதலான வற்றைப் போலும், பெரிய திருமொழி; திருவாய் மொழி' இவற்றின் பத்துகளைப் போலும் வழக்கமாகப் பத்துத் திருமொழிகள் இருந்தே தீரவேண்டும். ஆயின் பெரி யாழ்வார் திருமொழி. ஐந்தாம் பத்தில் நான்கு திரு