பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:46 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்ற பகுதியில் வகை எதுவுமின்றித் தொகைமட்டிலும் *நானுற்றெழுபத்தொன்றிரண்டு (473) என்று கூறி யுள்ளதை நோக்கும்போது தேசிகரின் (வடகலை சம்பிர தாயத்தின் தலைவர்) திருவுள்ளத்தில் திருப்பல்லாண்டு’ தனிப் பிரபந்தம் அன்று என்று இருந்தமை தெளிவாக அறிய முடிகின்றது. இவர் இராமாநுச நூற்றந்தாதி'யைச் சேர்த்து திவ்வியப்பிரபந்தம் நாலாயிரம் பாசுரங்கள் கொண்டது என்ற கொள்கையினர். தேசிகருக்குக் காலத் தால் சற்றுப் பிற்பட்டவரான அப்பிள்ளையாசிரியர் (தென் ரைாச்சாரியார் சம் பிரதாயத்தினர்) - திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தமாகக் கொண்டவர். இதனை கல்லதிருப் பல்லாண்டு கான் மூன்றோன் வாழியே! நானூற்றறு பத்தொன்றும் நமக்குரைத்தான்

  • - sumiĝGu.38

என்று பெரியாழ்வாரைப்பற்றியதமது வாழித் திரு நாமத்தில் பிரித்துக் கூறியிருப்பதனால் அறியலாகும். இரு சாரார் கருத்துகளையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்வது நம் கடமையாகின்றது. * . . . 1. திவ்வியப்பிரபந்தத்தை நாலாயிரமாகப் பிரித்து ஒவ்வொரு தொகுதியிலும் இந்த இந்தப் பிரபந்தம் இந்த 11. இவர்கள் இராமாதுச நூற்றந்தாதியை நீக்கித் திவ்வியப் பிரபந்தம் நாலாயிரம் பாசுரங்களையுடையது என்ற கொள்கையினர். இந்த இரு சம்பிரதாயத்தினர் கணக்கிடும் முறையை தெய்வத்தமிழ் (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு-முதல் பதிப்பு-1975) என்ற தொகுப்பில் வைணவ சமய நூல்கள்’ என்ற 10-வது கட்டுரையில் (பக். 472-475) விரிவாக விளக்கப் பெற் றிருப்பதைக் கண்டு தெளிக. 12. வாழித் திருநாமம்.7.