பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விட்டு சித்தன் விரித்த தமிழ் அசம்பாவிதமாகிவிடும். திருப்பல்லாண்டுடன் தொடங்கு கின்ற பெரியாழ்வார் திருமொழி முதற் பத்திலும் 110 பாசுரங்கள் இருக்குமாகையால் அது தனிப் பிரபந்தம் என்பதற்கு இது பிரமாணமாக மாட்டாது. - 6. இன்னொன்றும் ஈண்டு கருதத் தக்கது. நூறு பாசுரங்களுக்குப் பத்து என்று வியவகாரம் என்பது மிகவும் தகைப்புக்குரியது. நூறை தாது என்னாமல் ஏன் பத்து என்றால் சமாதானம் கூறவேண்டுமே. கூறமுடியுமா? நூறு பாசுரங்களில் பத்துப் பத்துப் பாசுரங்கள் இருப்பதால் பத்து என்ற வியவகாரம் என்னில் ஐந்து இருபது அல்லது இருபது ஐந்து இருப்பதால் ஐந்து என்றோ இருபது என்றோ வியவகாரம் இருக்கலாமே. அஃது அவர் விருப்பம். ஆகையால் அப்படி வியவகரித்தார் எனில் காரணம் எதுவுமில்லாமல் வியவகரித்தார் என்று முடிகின்றது. இனி நூறு ஒரு பத்து என்று கருதியவர் சரியாக நூறு இருக்க வேண்டுமென்று கருதினாரா அல்லது சிறிது அதிகமாயும் இருக்கலாமென்று கருதினாரா? ஒவ்வொரு பத்திலும் நூற்றுக்கு அதிகமிருப்பதால் முதலில் கூறிய கருத்து கூடாது. இரண்டாவது கருத்தில் நூறு நூறாகப் பிரிக்கப் புகுந்தவர் ஒவ்வொரு பாகத்திலும் அதிக மாயும் இருக்கலா மென்று ஏன் கொள்ளவேண்டும்? திருமொழி நடுவில் நூறு முடிந்துவிடுகின்றது. வட்டு நடுவேயின் ஐந்தாம் பாட்டோடு நூறாகிவிடுகின்றது. மிகுந்த ஐந்தை மேல் சேர்ப்பதில் பொருத்தம் இல்லை. அதனால் அந்த ஐந்தும் இந்த நூறிலேயே வைக்கப்படுகின்ற தென்னில், இந்தச் சங்கடம் இருப்பதால் நூறு நூறாகப் பிரிக்கும் எண்ணம் அவருக்கு இல்லையென்றே கொள்ளவேண்டும். பத்து திருமொழிகளை ஒருபத்தாக்கினார் என்றால் எந்த விதக் குற்றமும் சங்கடமும் இல்லையாகையால் இதுவே. பிரமாணிக்கம் என்பது தெளிவு. . . . . . - 7. பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரை மன்னர் களும் திருப்பல்லாண்டுடன் சேர்த்து பெரியாழ்வார்