பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு-தனிப்பிரபந்தமா? 5} திருமொழி ஒரே பிரபந்தம் என்ற திருவுள்ளம் கொண்ட வர்கள். பெரியாழ்வார் திருமொழியின் இறுதிப் பாசுர மாகிய வேயர் தங்குலத்து (5.4:11) என்கின்றதில் :கோயில் கொண்ட கோவலன்' என்ற சொற்றொடருக்கு வியாக்கியானம் செய்யுமிடத்தில், திருப்பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் இவர் மனத்திலிருக்கின்ற கிருஷ்ணன் தான் பிறந்த படியையும் வளர்ந்த படியையும் கேட்டான்' என்று பெரியவாச்சான் பிள்ளை கூறியிருப்பதனாலும் இதற்கு முன்னர் திருப்பல்லாண்டின் அர்த்தத்தை நிகமிக்கின்றார்’ என்று பன்முறை கூறியிருப்பதனாலும் ஒரு பிரபந்தம் ஆனால்தான் தொடக்கம் என்பதும் நிக மனம் என்பதும் சேருமாதலாலும் இவர் கருத்துப்படி திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தமன்று என்பது உறுதிப் படுகின்றது. - 8. மேலும் மணவாள மாமுனிகள் அருளிய உபதேச ரத்ன மாலை'யில் பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான்" (15) ஆதி திருப்பல்லாண்டானதுவும் (19) உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை (20) என்ற சொற் றொடர்களில் வரும் திருப்பல்லாண்டு என்பது அது தனிப் பிரபந்தம் என்பதை உறுதிப்படுத்துகின்றது என்றும், திருக்கோயில்களில் ஏதாவது ஒரு பிரபந்தம் ஒதநேரிடும் போதெல்லாம் திருப்பல்லாண்டு முதலில் ஒதப்பெற்றும் அதன் பின்னரே அக்குறிப்பிட்ட பிரபந்தம் ஒதப்படு கின்றது என்ற வழக்கம் இருப்பதாலும் திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் என்பது மேலும் வலியுறுகின்றது" என்றும் கூறுகின்றனர். மேற் குறிப்பிட்ட உபதேசரத்ன மாலைப் பாசுரங்களில் இரண்டாவது தொடரிலுள்ள திருப்பல்லாண்டு வேதத்திற்கு 'ஓம்' என்ற பிரணவம் போல திவ்வியப் பிரபந்தத்தின் பொருளுக்கெல்லாம் சுருக்கமாயும் மங்கள ரூபமாயும் இருப்பதாகக் கூறுகின்றதே