பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விட்டு சித்தன் விரித்த தமிழ் தேவர்களும் சூழ்ந்து ஆழ்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர இவ்விடத்தைத் தேர்ந்து எடுத்து ஒன்று கூடுகின்றனர். திருமால் நரசிம்மாவதாரம் எடுத்துத் தன் வள்ளுகிரினால் இரணியனை வதைப்பது என்று முடிவு செய்கின்றனர். தேவர்கள் யாவரும் கோஷ்டியாகச் (கூட்டமாகச்) சேர்த்து ஆலோசனை செய்த இடமாதலின் இதனைக் கோட்டியூர்” என்று வழங்குகின்றனர். திரு என்ற அடையுடன் இவ்வூர் திருக்கோட்டியூர் என்று திருநாமம் பெற்று வழங்கலா யிற்று. இக்காரணம் பற்றியே இத்தலத்தில் மும்மூர்த்தி களும் காட்சி அளிக்கின்றனர் போலும். gவல்லப பாண்டியனின் அரச புரோகிதராகவும் அமைச்சராகவும் இருந்த செல்வநம்பி இந்த ஊரைச் சார்ந் தவர். இவர் பெரியாழ்வாரின் நெருங்கிய தோழர். ஒரு சமயம் செல்வநம்பியைப் பார்ப்பதற்குத் திருக்கோட்டியூர் வருகின்றார் விஷ்ணுச் சித்தர். இங்கே கோயில் கொண் டிருக்கும் செளமிய நாராயண மூர்த்தியைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திவ்விய மங்கள விக்கிரகம் கிருஷ்ணாவதாரத்தை நினைவூட்டுவதாக அமைகின்றது விஷ்ணுச் சித்தருக்கு. இவர் மனக்கண்ணுக்கு அந்தத் திருக்கோயில் நந்தகோபன் மாளிகையாகவும், அந்த ஊர் ஆயர்பாடியாகவும் மாறிவிடுகின்றன பெரியாழ்வார் திருவுள்ளத்தில்; நின்றும் இருந்தும் நடந்தும் கூத்தாடியும் கோலம் காட்டும் செளமிய நாராயணன் ஆயர்கட்கும் ஆய்ச்சியர்களுக்குமிடையே குழந்தைக் கண்ணனாக நேர் காட்சி தருகின்றான். இதைப் பெரியாழ்வார் கண்ணனின் பிறந்த நாள் காட்சிகளாகக் கண்டு நமக்குக் காட்டு கின்றார்; தானும் யசோதையாக மாறிக் காட்சியை வழங்கு கின்றார். திருக்கோட்டியூரில் முதன்முதலாக ஏற்பட்ட பக்தியதுபவம் சொந்த ஊரான புரீவில்லிப்புத்தூரிலும் அடிக்கடி ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும் ஊகிக்கலாம். 1. பெரியாழ். திரு. 1.1.10.