பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் 59. பாதத்தில் முதலில் கண் வைத்து திருமுடி வரையில் செல்லுகின்றார். அதுபோலவே இவரும் பாதகமலங்களில்" முதலில் கண் வைத்து குழல்கள் வரை காட்டிச் செல்லு கின்றார். . . . . ஆழ்வார்கள் அனைவருக்குமே எம்பெருமான் திருவடி தேனே மலரும் திருப்பாதம் ஆகும். இப்படிப்பட்ட தனது திருவடியிலுள்ள தேனைப் பருகுவதற்காகவும், தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்களெல்லாம் உய்ய வேண்டும் என்பதற்காகவும் கண்ணன் தனது திருவடிகளில் ஒன்றை எடுத்து வாயிலே வைத்து சுவை பார்த்துக் கொண்டிருக்கின்றான். இதைக் காணும் யசோதைப் பிராட்டி மிக மகிழ்ந்து தன் மகிழ்ச்சியைப் பிறரும் கண்டு மகிழ வேண்டும் என்று எண்ணித் தன்னருகிலுள்ள பிற பெண்களைக் கொண்டாடி யழைத்து, நீங்கள் இக்குழந்தை சுவைத் துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்' என்று அவர்கட்குக் காட்டுகின்றாள். சீதக் கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணிரே! . . . பவள வாயீர் காணிரே! (1.3 : 1) [சீதம்-குளிர்ச்சி; குழல்.தலைமயிர். அடுத்து, பாதக்கமலங்களில் உள்ள பத்து விரல்களையும் காணுமாறு பணிக்கின்றாள். கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்கள். கால்களுக்கு இடும் செம்பஞ்சு, மருதாணி என்பனபோல கண்ணனுடைய திருப்பாதங்களில் ஒன்பது விரல்கட்கு நவரத்தின வண்ணத் தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும். தீட்டி யசோதை என் மணிவண்ணனுடைய திருப்பாதங் களில் பத்து விரல்களும் , நவரத்தினங்களையும் நல்ல