பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ விட்டு சித்தன் விரித்த தமிழ் பொன்னையும் ஒளி விளங்க மாறி மாறிப் பதித்து வைத்தாற் போலச் சேர்ந்தனவாய் இலட்சணங்களில் குறையொன்றும் இல்லாது இருப்பதை வந்து பாருங்கள்" என்கின்றான் (2). யசோதையின் முலைப்பாலை வயிறார உண்டு படுத்துக் கிடக்கின்றான் கண்ணன். அவனுடைய கணைக் கால்களில் வெள்ளித்தண்டை இலங்குகின்றது. இணைக்காலில் வெள்ளித் தளைகின்று இலங்கும் கணைக்கால் இருந்தவா காணிரே! காரிகையீர்! வந்து காணிரே! (1.3:3) fகாரிகையிர் . அழகுடைய பெண்கள்; இந்த அழகை வந்து காணுமாறு பணிக்கின்றார் பெண்களை. அடுத்துக் காண வேண்டுவது முழந்தாள். யசோதை சொல்லுகின்றாள்: பெண்டிர்காள், நான் சிரமப் பட்டுக் கறந்து காய்ச்சித் தோய்த்துக் கடைந்து வெண்ணையாக்கி உருக்கித் தடாக்களில் சேர்த்து வைத்திருந்த நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் மிச்சமாகாதபடி இவன் வாரியுண்கின்றான். இவ்வளவும் உண்டால் செரிக்க மாட்டாதே! என்கின்ற வயிற்றெரிச்சலாலே கையைப் பிடித்திழுத்து மத்திலே சுற்றிக் கடைந்து பழகின. தாம்பாலே அடிப்பதாக நான் ஓங்க, அச்சத்தாலே அதிலிருந்து தப்புவதற்காகத் தவழ்ந்தான். இப்படிப்பட்ட இவனுடைய முழந்தாள்கள் இருக்கும்படிை வந்து காணுங்கள்' என்கின்றான் (4). - a ' - அடுத்து, திருத்துடைகளை வந்து காணுமாறு பணிப்பது: -