பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் 每葱 பிறங்கிய பேய்ச்சி முல்ைசுவைத் துண்டிட்டு உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை மறங்கொள் இரணியன் மார்வைமுன் கீண்டான் குறங்குகளை வந்து காணிரே! - குவிமுலையீர்! வந்து காணிரே! (5) (பேய்ச்சி - பூதனை குறங்குகள் . துடைகள்] என்பது பாசுரம். முற்காலத்தில் கொடிய இரணிய னுடைய மார்பைப் பிளந்தவன். பூதனையினுடைய முலையைச் சுவைத்துப் பாலுண்பவன்போல் அவளுடைய உயிரையும் உண்டவன். இப்போது இங்கு ஒன்றுமறி யாதவன்போல் உறங்குகின்றான். இவனுடைய திருத் துடைகளை வந்து பாருங்கள் என்கின்றாள் (5). திருத்துடையிலிருந்து இவள் கவனம் முத்தத்திற்குத்ே திரும்புகின்றது. - மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாதே தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் 3. முத்தம் . ஆண்குறி. மூத்ரம் என்ற சொல் மூத்திரம் பெய்வதற்கு உறுப்பான அவயவத்தைச் சொல்லு: வதாகச் சிலர் கூறுவர். சிறு குழந்தைகளின் குறியைப் பேரன்புடையோர் முத்தமிடுபவர்கள் என்னும் காரணம் பற்றி முத்தம் எனப் பெயராயிற்று என்பதாகவும் மற்றும் சிலர் கருதுவர். - 4. அத்தத்தின் பத்தாம் நாள் - கீழ்முறையில் கணக் கிட்டால் உரோகிணி நட்சத்திரம் வரும்; மேல். முறையில் எண்ணினால் திருவோணம் வரும். இங்ங்னம் இன்ன நட்சத்திரம் என்று வாய்விட்டுச் சொல்லாததற்குக் காரணம் என் என்னில்: இவ்வாழ்வார் மங்களா சிாசன பரர்; கண்ணன் பிறந்த நட்சத்திரத்தை நேர்ர்கச் ச்ொன்