பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 விட்டு சித்தன் விரித்த தமிழ் முத்தம் இருந்தவா காணிரே! முகிழ்ககையீர் வந்து காணிரே! (6)

மத்தம் - மதம், களிறு - ஆண் யானை ; சித்தம் - மனம்; அத்தம் - அஸ்தம்; பத்தாம் நாள் - திரு வோனம்; அச்சுதன் . கண்ணன்; முத்தம் - ஆண் குறி; முகிழ்நகை - புன்முறுவல்)

என்பது பாசுரம், தேவகியின் திருவயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் திருவவதரித்த கண்ணனின் முத்தம் இருக்கும் நிலையைக் காணுங்கள்! என்கின்றாள். முத்தத்திலிருந்து யசோதையின் கவனம் இடை பழகுக்கும் இடையிலுள்ள ஆபரணங்களின் அழகுக்கும் செல்லுகின்றது. இருங்கைம் மதகளிறு ஈர்க்கின் றவனை பருங்கிப் பறித்துக்கொண் டோடு பரமன்றன் நெருங்கு பவளமும் நேர்காணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணிரே! வாணுதலீர்! வந்து காணிரே! (?) இருகை - பெரிய துதிக்கை; ஈர்க்கின்றவன் - வசமாக தடத்தும் பாகன்; பருங்கி - கொன்று; ஒடு. ஒடின; பரமன் - கண்ணன்: நெருங்கு பவளம் - செறியக் கோத்த பவள வடம்; நேர் நாண் - அழகிய அரை நாண், மருங்கு . இடை)

இவன் குவலயாபீடம் என்ற யானையின் கொம்பு களைப் பறித்து யானையினையும், பாகனையும் கொன்று,

னால் சத்துருக்கள் அபிசார யாகம் (எதிரிக்கு மரணம் உண்டாகுமாறு செய்யும் ஒரு வித யாகம்) செய்வார் களோ? என்ற அதிசங்கையினால் மறைத்துச் சொல்லு கின்றார் என்று சுவையாகப் பொருள் கூறுவர்.