பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் 63 கம்சன் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு ஓடின பரம புருடன், செறியக் கோத்த பவளவடமும் அழகிய அரை நானும் முத்துவடமும் சேர்ந்த இவனுடைய திருவரையின் அழகினைக் காணுங்கள்' என்று கூறி அழைக்கின்றாள். அடுத்து, திருவுந்தியின் மீது கவனம் போகின்றது. :இந்தப் பயல் தன்னோடு விளையாட வந்த சிறு பிள்ளை களின் கூட்டத்தில் தன் வல்லமையைக் காட்டிக் கொம்பு முளைத்த யானைக்குட்டிபோல் தானே முக்கியினால் நின்று விளையாடுகின்றான். இவனுடைய திருவுந்தியின் அழகைக் கண்டு களியுங்கள்' என்று பெண்களின் கவனத்தைத் திருவுந்தியின்மீது திருப்புகின்றாள் (8). **இந்தத் துட்டப் பயல் ஆயர் பாடியிலுள்ள இடையர் மனையெல்லாம் சென்று பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்ததாக ஆய்ச்சிகள் முறையிட, நான் இவனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்தேன். இந்த உதரத்தை வந்து பாருங்கள்" என்று பணிக்கின்றாள் ஆய்ச்சிமார்களை (9). அகலகில்லேன் இறையும்' என்று கூறி அலர்மேல் மங்கை உறையும் திருமார் பைக் கண்டு களிக்குமாறு ஆய மங்கையர்களை அழைக்கின்றாள் யசோதைப் பிராட்டி. பெருமா உரலில் பிணிப்புண் டிருந்து, அங்கு இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திருமார்பு இருந்தவா காணிரே! ; : * . சேயிழை யீர்வந்து காணிரே! (1.3:10) (பெருமா - மிகப் பெரிய: பிணித்தல் - கட்டுதல்; இறுத்த . முறித்த: குருமாமணிப் பூண் - கெளத் துவம்; குலாவி - அசைந்து) -- என்பது பாசுரம். கெளத்துவமணி விளங்கப் பெற்ற திருமார்பினை வந்து காணுங்கள்!' என்கின்றாள்.