பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் శణ్ణి வாங்காமல் ஆதரித்து வளர்ப்பதனால்தான் அவளது கண்ணின் நிறமெல்லாம் கண்ணனது திருமேனியில் ஏறித் திருமேனியின் நிறம் கறுத்ததோ என்று ஆழ்வார் கருதுவதை முன்னிரண்டு அடிகள் உணர்த்துகின்றன. யசோதைப் பிராட்டிக்குச் சிற்சில சமயங்களில் காட்டுதலால் நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் என்று கொள்ளலாம். கைத்தலத்தில் சங்கு சக்கர ரேகைகள் அமைவது மகாபுருஷ இலட்சணம். இத்தகைய கைத்தலங்களைக் கண்டு களியுங்கள்' என்கின்றாள். - கைத்தலங்களிலிருந்து கண்டத்திற்கு வருகின்றாள். *அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் (அமலனாதி-6) என்று பாண் பெருமாள் மங்களாசாசனம் செய்த கண்டம் அல்லவா? வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணிரே! காரிகை யீர்!வந்து காணிரே! (1.3:13). (பூ குழல்-மலர் அணிந்த முடி கோவலர்குட்டன். இடைப் பிள்ளை; விழுங்கிய.பிரளய காலத்தில் விழுங்கிய; கண்டம்.கழுத்து.) யசோதைப் பிராட்டி கண்ணனைத் தன் மகனென்றே தினைத்திருந்தாலும், ஆழ்வார் உண்மையை அறிந்தவ ராதலால், மகனாகக் கொண்டு வளர்க்கின்ற என்கின்றார். பிரளய கால்த்தில் அண்டங்களையெல்லாம் ஒரு சேர விழுங்கிய கண்டத்தை வந்து காணுங்கள்!" என்கின்றாள். - - கண்டத்திலிருந்து திருவாய்க்குக் கவனம் செல்லு கின்றது. எப்படிப்பட்ட திருவாய்? யசோதைநிலையிலுள்ள ஆழ்வாரையே கேட்போம். வி. 5 -