பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விட்டு சித்தன் விரித்த தமிழ் எம்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென் றெடுத்துக் கொண்டு அம்தொண்டை வாயமுது ஆதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்.இச் செக்தொண்டை வாய்வந்து காணிரே! சேயிழை வீர்!வந்து காணிரே! (1.3:14). (தொண்டைவாய்.கொவ்வைச் செவ்வாய்; எடுத்துக் கொண்டு . ஒக்கலில் எ டு த் துக் கொண்டு; தொண்டைவாய் அமுது-வாயில் ஊறும் அமுதம் போன்ற நீர்; ஆதரித்து-விரும்பி; தருக்கி.நெருங்க; செம்.சிவந்த; சேயிழையீர்.பெண்காள்!) -

இடைப்பெண்கள் என் சிங்கக்குட்டியே, வா!' என்று கண்ணனை எடுத்துக் கொண்டு கண்ணனுடைய திருவாயில் ஊறும் அமுதத்தைப் பருகுவார்கள். இத்தகைய அமுதம் ஊறும் வாயை வந்து காணுங்கள்!' என்று அழைப்பு விடுக்கின்றாள். X

திருவ தரத்திலிருந்து அவனுடைய குரல், திருக் கண்கள். திருப்பவளம் துடித்தல், புன்முறுவல், மூக்கு இவற்றின்மீது கவனம் செல்லுகின்றது. மூக்கும் முழியும்" என்பது உலக வசனம் அல்லவா? நோக்கி யசோதை துணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்துநீ ராட்டும்.இக் கம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணிரே! மொய்குழ லீர்!வந்து காணிரே (1.3:15). (நோக்கி-ஆராய்ந்து பார்த்து; நுணுக்கிய.அரைத்த, நீராட்டும்.குளிப்பாட்டும்; வாக்கு-குரல்; நயனம். கண்; முறுவல்-புன்சிரிப்பு: மொய் குழல்-செறிந்த மயிர் 1