பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் - 67 என்பது பாசுரம். கண்ணனின் திருமேனியழகினை அறியும் யசோதைப் பிராட்டி தான் அத்திருமேனிக்கு ஏற்றவாறு தகுதியாக அரைத்த மஞ்சள்காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனம் செய்யும்படி அடங்கியிருப்பன், இத்திலையில் அவனுடைய திருவாக்கும், நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கின்ற அழகை வந்து கண்டு மகிழுங்கள் என்கின்றாள். z முகச்சமுதாயச் சோபையைக் காட்டும் நோக்குடன் தொகுப்பாகச் சொன்னவற்றிலிருந்து திருக்கண்களைத் தனியாக நோக்குமாறு பணிக்கின்றாள் யசோதைப் பிராட்டி. கரியவாகிப் புடைபரந்து, மிளிர்ந்து செவ்வரி ஒடி நீண்ட,அப் பெரிய வாய கண்கள் (அமலனாதி-8) என்று பாண்பெருமாள் மங்களாசாசனம் செய்த திருக் கண்கள் அல்லவா? விண்கொள் அமரர்கள் வேதனை தீரமுன் மண்கொள் வசுதேவர் தம்மகனாய் வந்து திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் கண்க ளிருந்தவா காணிரே! 鑫露盘鲇酸5图 பீர்!வந்து ಹTಣf.By! (1.3:16). (விண்கொள்.உம்பர் உலகிலுள்ள: அமரர்.தேவர்கள்; வேதனை.துன்பம், மண்கொள்-பூமியை இருப்பிட மாகக் கொண்ட, திண்கொள்.வலிமை கொண்ட: தேய-ஒழிய, கனம்-தங்கம்.1 என்பது பாசுரம். தேவர்கள் துன்பம் திரும்படி வசுதேவ னுடைய மகனாகப் பிறந்து இவன் வளரும்போதே அசுரர்கள் தேயத் தொடங்கினர். இத்தகையவனின் திருக் கண்களை வந்து கண்டு அதுபவியுங்கள்!' என்கின்றார். திருக்கண்களிலிருந்து திருப்புருவங்களின்மீது இவள் பார்வை படுகின்றது. . .