பக்கம்:விதியின் நாயகி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 காரணமாக, அவர் தனது வலது கையை இழக்க நேரிட்டு விட்டது!...ஐயோ, காலம் கொடிது!

என் அன்பு அத்தானிடம் விளைந்த இம்மாறுதல், என் இதயத்துள் எத்தகைய மாறுதலையும் எழுதிக்காட்டவில்லே. ‘அத்தான், நான் என்றென்றும் உங்கள் அடியாள்தான். என்னை ஏற்று ரட்சியுங்கள். உங்களுக்குச் சகல விதத்தி லும் நான் துணை நிற்பேன், என்றேன்; நெஞ்சு நெக் குருகச் சொன்னேன். எரிதழலில் துவப்படும் சாம்பிராணி யினின்றும் எழுகின்ற நறுமணமென என் இதயம் அவர் மனத்திடை மனத்தைப் பரப்பியதை நான் அவரது முக பாவத்திலிருந்து கண்டு கொண்டேன். ஆனால் நான் பாவி, கொடுத்து வைக்காதவளாகிப் போனேன்.

'உன் எழில் ஆதரிக எழில், முழுமை பெற்றிருக்கும் உன்னுடைய அழகிலே இணைவதற்கு, குறைபட்ட என் எழில் தகுந்ததன்று. என்னை நீ என்றென்றுமே மறந்துவிட வேண்டி நேரிடும். நிறை பெருக்குக்குள் என் குறை உடலைத் திணித்துக் கொள்வேன்!” என்று ஆணை வைத்தார். தான் துடித்தேன். தரைமீனனேன். 'அத்தான், உங் கள் கருத்தெதுவோ, அதன் பிரகாரமே நான் நடக்கிறேன். நீங்கள் என்றென்றும் என் கண் பார்வையில் இருங்கள். அதுவேதான் எனக்கு அளப்பரிய ஆறுதல் நல்கும். இந்த ஒரு வரத்தையாகிலும் தாருங்கள்!!’ என்று வேண்டினேன். அவர் சிரித்தார். என் மனம் அழுததை அவரிடம் எங்கனம் கோடிட்டுக் காட்ட முடியும் ? .

  • உனக்கென்று-உன்னுடைய ஓவிய எழில் நிறைக் கென்று வேறு ஒருவர் ஜனித்திருக்க வேண்டும். பாரேன், உனக்குரிய மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கிறேன, இல்லையா என்று!’ என்று மகிழ்வின் பாதையில் மடங்கி நின்று, ஆசை யின் கனல் வீச்சுடன் நாத் தழுதழுக்கப் பேசிஞர். .