பக்கம்:விதியின் நாயகி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஆம்: நாமெல்லோரும் ஆண்டவனுடைய விளையாட்டுப் பொம்மைகள். இல்லையென்ருல், இப்படிப்பட்ட சிருஷ்டி விளையாட்டுக்கள் நிகழ வாய்க்குமா? வாழ்வே ஒரு சோதனை என்று புரிந்தும், உணர்ந்தும், சொல்லியிருக்கிருர்கள் பெரியவர்கள், இப்போது நானே ஒரு சோதனைக் கட்டத்தில்தான் நின்றுகொண்டிருக்கின்றேன். நேர்முகம் காட்டி உங்களிடம் சொல்லத் தயங்கித் தத்தளித்த ஒரு செய்தியை இப்போது உங்கள் முன் வைத் திடவேண்டியவளாக ஆகியிருக்கிறேன். இது என் கடமை யாயிற்றே : எனக்கு ஒர் அத்தான் இருக்கிருர் பெயர்: சுந்தரம். சுந்தரமானவர்தான். எனக்கு அவர்; அவருக்கு நான்’ என்றே எங்கள் இருதரப்புக் குடும்பத்தவர்களும் தீர்மானம் கட்டி வைத்திருந்தார்கள். ஆனால், விதி மாறிச் சுழன்றது. எங்களைத் திசைக்குத் திசை மாற்றிவைத்துச் சுழன்றது. என் தந்தையின் வியாபார நொடிப்பு ஒருபுறம் இருக்கட்டும். அது எங்கள் வரை, எவ்விதமான சலனத்தையும் உண்டாக்க வில்லை. ஆல்ை...ஆனல்...? என் அத்தான் கைதேர்ந்த ஆட்டக்காரர். டென்னிஸ் சாம்பியன். சென்னைக்கும் தஞ்சைக்கும் நடந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற அன்று அவர் மகிழ்ச்சி துள்ள ஓடோடி வந்தார், கைமட்டையைச் சுழற்றிக் கொண்டே. களைப்பின் மிகுதியால் ஏற்பட்டிருந்த கிறுகிறுப்பினால் அவர் நிலை தடுமாறிச் சாய்ந்தார். சாய்ந்த வேகத்தில், நடையில் கிடந்த அரிவாள்மனே அவருடைய சோற்றுக்கை முட்டை வெட்டி விட்டது. தொடக்கத்தில் அசிரத்தையுடனும் அஜாக்கிரதையாயும் இருந்ததால், நிலை சீர்கெட்டது. இறுதியில், அவரது வலது கை வீங்கியது; துடித்தார். வலக் கையில் உள்ளுக்குள்ளேயே புரையோடிப் போய்விட்ட புண்