பக்கம்:விதியின் நாயகி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய அலையும் பழைய விதியும்: ஹோட்டல் சொர்க்கம், அறை எண்: இருபது. *டப் பென்று ஒரு சத்தம் கேட்கிறது!... எரிச்சல் முட்டி மோதியது: அரை மனசோடு எழுந்து உட்கார்ந்தான் சுந்தர். என்ன சத்தம் அது? உடலில் பரவிக்கிடந்த இன்பக் கிளர்ச்சியின் இனிய கிளு. கிளுப்பு மாறவில்லை; மறையவில்லை. இன்னமும் கண்கள் சுற்றுமுற்றும் பரபரத்தன. அதோ, தரையிலே விழுந்து மல்லாந்து கிடக்கிறதே. அந்தத் தலையணை? சே!... 'ஒ.சுஜா!’ கால்கள் இரண்டையும் முறைப்பாகவும் முனைப்பாகவும் நீட்டினன் அவன். நெடுமூச்சு நழுவியது. தகிப்பு கூடுதல்தான். உடல் உஷ்ணத்தின் விளைவாக இருக்க வேண்டும். தலைமாட்டில் இருந்த திண்டு இப்போது