பக்கம்:விதியின் நாயகி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 காலம் ஒன்று இருக்கத்தான் இருந்தது. கனவல்ல அ து கதையும் அல்ல! - தாய்வழிச் சொந்தம் விட்டுப் போகாமல் தொட்டுக் கொள்ளும் வகையில், தாய் தேர்ந்தெடுத்துக் கொடுத்த அழகி சுஜாதாவை சுபயோக சுபதினமொன்றில் கைத்தலம் பற்றின. அந்தப் பொன்னை வேளையை அவன் அன்றும் மறக்கவில்லை: இன்றும் மறக்கவில்லை. என்னவோ ஒரு சோதனைக் காலம் -அவனும் அவளும் பிரிய நேர்ந்து விட்டது. ஒரு நாள்: - ஸ்டுடியோவில் விதிச்சுழல்’ படத்திற்கான படத் தொகுப்பு அலுவல்களை உதவியாளர் என்ற பொறுப்பின் கடளுேடு முடித்துப் போட்டு விட்டு, கம்பெனிக் காரில் வந்து இறங்கினன் அவன். * சுஜாதா அவனுக்காகக் காத்திருந்தாள். அவனைக் கண்டதும், கதிர் முத்தம் பட்ட கமலமாக மலர்ந்த அவள், *வாங்க, அத்தான், என்று முகமன் மொழிந்தாள். உணவு பரிமாறிஞள். - - புதின துகையல் என்ருல் அவனுக்கு எப்போதுமே நிரம்ப இஷ்டம்.ஆசையாக ஒருதுளியை.எடுத்துப் பதம் பார்த்தான். உப்புக் கரித்தது. கரிப்பு என்ருல், அசாத்தியக் கரிப்பு. அவ் வளவுதான்! அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து தொலைத்தது. கோபம் வந்துவிட்டால் அவன் மனி தளுகஇருந்து பழகாதவன். சுஜாவுக்குத் திருப்பூட்டிய மறுமாதமே அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டாள். இப் போது அவள் குடித்தனப் பாங்கின் சாதுர்யத்தோடு, கொண்டவனச் சமாதானப்படுத்தத் தயாராக இருந்தாள். ஆனல் அவன்அந்தச் சமாதானத்தை மனிதாபிமான்த்தோடு அங்கீகரிக்கத் தயாராக இருந்தால்தானே? அவன் அடித்த எல்லா அடியைபும் உதைத்த எல்லா உதையையும் வைராக்