பக்கம்:விதியின் நாயகி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 கூடல்தான் அடுத்த கட்டம். அதுவே தாம்பத்தியத்தின் விதியோ?... புகை: புகைச்சல் ‘நான்தான் ஆண்பிள்ளையாக நடந்து கொள்ளத் தவறி விட்டேன்! என் சுஜதாவாகிலும் பெண் பிள்ளையாக நடந்து கொண்டிருக்கலாகாதா?... சே!?-எதையோ நினைந்துசினம் கொண்டு, எதற்காகவோ வருந்தி, கழிவிரக்கம் பூண்டு, வினவுக்கும் விடைக்குமாகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, திணறித் திண்டாடி, முடிவில் ஒருமுடிவுக்கும் வரமுடியாத வன் போன்று குழப்பத்தின் உச்சியில் நின்ருன் சுந்தர். செழித்துத் தழைத்திருந்த மீசையை நீவி விட்டுக் கொண் டான். அந்த மீசையை எப்படி வர்ணித்து எவ்வளவு புகழ் வாள் சுஜாதா! சிகரெட்டின் நெருப்புத்தான் சுட்டதோ? 'சுஜா1? வந்தவன் ஜாகப். இருளை விலக்க வெளிச்சம்-உண்டு. பாய்ந்து படர்ந்த ஒளியில் காலில் மிதிபட்ட அந்தப் படத்தைப் பதட்டத்துடனும் பயத்துடனும் பார்த்துவிட்டு மூடிய தோல் பெட்டி மீது வைத்தான்; சிலுவைக் குறி இட். டான் சிறுவன். - சுந்தரின் மனிதமனம் விம்முகிறது. யாரோ தேடிவந்திருப்பதாகத் தாக்கீது கொடுத்தான் ஜாகப். - மண்டை இப்படியா கரும்பாறையாகக் கணக்கும்: O Ο O