பக்கம்:விதியின் நாயகி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 லார் குப்பைகளைப் பிரிக்கையிலே, இந்தத் தந்தி கிடைச் சிருக்கு கொடுத்தனுப்பிச்சார், ஸாரோ! என்று விவரம் குறிப்பிடுகிருன். - எங்கெல்லாமோ சுற்றி அலைந்துவிட்டு, ஏழு மாதங் களுக்கு முன் சுவர்க்கத்துச்கு வந்து, விதியின் கரையில் சேர்ந்திருக்கிறது அந்தத் தந்தி!... கிழித்தான். சுஜாதா மாரடைப்பினல் இறந்து விட்டாள்:” சுந்தர் அப்படியே சிலையாக நின்ருன். நெஞ்சில் சிலை வடிவம் கொண்டிருந்த சுஜாவை நினைவில் சிலை வடித்தவண் ம்ை அப்படியே சிலை யாக நின்ருன்...சண்கள் பொடிக்கின் றன; நெஞ்சம் வெடிக்கிறது; சிரிப்புத் துடிக்கிறது: நோ ...மை டியர் வீனஸ் கஜா இஸ் நாட் அட் ஆல்-டெட் என் சுஜா என் வரை என்ற்ென்றும் நித்திய மல்லியாக என் உயிரில் வாழ்ந்து கொண்டிருக்கிருள்; வாழ்ந்து கொண்டே யிருப்பாள்!...ஆமாம்!-சிரிப்பு மண்முட்டி, விண்முட்டி ஒலிக்கிறது: எதிரொலிக்கிறது: எதிரொலித்துக் கொண்டே யிருக்கிறது!... - - 'அய்யொடா...ஐயோ...சேட்டா..? விதியின் அலையாக-அலையின் விதியாக அழுகுரல் పోలి எங்கிருந்தோ மிதந்து வந்துகொண்டேயிருக்கிறது. - பாவம், so சுஜாதாவுக்கு அழமட்டும்தான் தெரியும் போலும்!... - - ஆனல், விதிக்கோ சிரிக்க மட்டும்தான் தெரியுமோ?...