பக்கம்:விதியின் நாயகி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 8 Í ஜாதகங்களைக்கூட அப்படிப் பிரமாதப்படுத்திக் பார்க்க வேண்டாம், பனப் பொருத்தம்தான் பிரதானம்!......”* என்ற நாகராஜனின் தந்தையின் வாக்குக்குப் பதில் வார்த்தை சொல்லவில்லை கல்யாணியின் தாய். அண்ணன் சொல்வது சரி என்பது அவள் அபிப்பிராயம். வாஸ்தவம் தான் என்ற ரீதியில், நாகராஜனும் கல்யாணியும் இன்னும் பல மாசத் தங்கள் இருவரின் மனப் பொருத்தத்தை அடித் தளமிட எண்ணிஞர்கள். பிரிவு அவர்களிடையே குறைந்து வந்தது. குறு நகையும் குதுகல மொழியும், கண்ணடிப்பும் கள்ள விழிப் பார்வையும் அவர்களிடையே எக்சேஞ்ச்" ஆயின. பின், கேட்பானேன்! நாகராஜன் சலேப் பைத்தியம் கொண்டவன். கதை, நாவல் என்ருல் அவனுக்குப் போதாம் வீர் பருகுவதுபோல. கல்லூரி செல்லும்போது கண்ணி ருடன் கல்யாணியைப் பிரியும் நாகராஜன், கல்லூரி விட்டுத் திரும்புகாலில் ஆனந்தம் முகமன் கூற, பாவைக்கு வகை வகையான உடைகள் சலசலச்க, இலக்கியச் சந்தையில் வெளிவந்த புதுப் புத்தகங்கள் புன்னகை செய்ய அமர்க்சள மாக வந்து சேருவான். அவளுக்கும் அப்போதுதான் உடலில் உயிர் தரிக்கும்; அவனுக்கும் அப்படித்தானே! காலத்தேருக்கு ஹோல்டான் போட யாரால் முடியும்? நாகராஜனை யும் கல்யாணியையும் தம்பதியாக்கத் திட்ட மிட்டார்கள் உடையவர்களும் உரியவர்களும். அப்பொழுது நாகராஜன் பி.ஏ. எழுதிவிட்டு வந்திருந்தான். அதே சமயம் தான் திருமணச் செய்தியும் துவங்கியது. அதே கணம் தான் அந்த எதிர்பாராத சம்பவமும் நடந்தது. கல்யாணியைத் தான் மணக்க முடியாதென்று இருந்திருந்தாற் போல ஒரு வெடிக் குண்டைத் துாக்கிப் போட்டான் நாகராஜன்!-அது பாவம், கல்யாணியின் தலையில் ட பி. ரென்று விழுந்து வெடித்தது. தனக்குத் தன் அத்தான்தான் இனி சகலமும்’ என்றிருந்த அவள் ஆசைமிக்க இன்பக்கனவு கடைசியில் இப்படித் தேய்ந்து உருக்குலைந்து போகுமென்று அவள் துளி வும் எதிர்பார்த்தவளல்லவே...! . . . . - ki .-i 2