பக்கம்:விதியின் நாயகி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நளிளுவின் குறிப்பை அறிந்தாள் கல்யாணி. நளின, இந்தா உன் புத்தகம்’ என்று கூறிப் புத்தகத்தை நீட்டினுள். நளின வெடுக் கென்று புத்தகமும் கையுமாக மறைந்துவிட் டாள். கல்யாணிக்கு அந்தப் புத்தகம் தன் பார்வையை விட்டு விலகினதும், ஏனே கண்ணிர் மண்டியது. - ○ KᏇ ○ கல்யாணியின் கண்முன் அந்தப் புத்தகம் சுழன்றது. அதில் கண்ட அன்புள்ள கல்யாணிக்கு அன்பளிப்பு-நாக ராஜன்’ என்ற அந்த வரிகள் சுழன்றன. அவள் சுழன்ருள்

  • அந்த நாளில் என் அத்தான் நாகராஜன் எனக்கு அன்பளிப்பு செய்த இந்தப் புத்தகத்தை நான்தான் அவ ருக்கே திருப்பி அனுப்பிவிட்டேனே! இன்றைக்கு மீண்டும் இந்த இருபது வருஷங் கழித்து என் பார்வையில் பட்ட இப் புத்தகம் நளினுவிடம் எப்படி வந்தது?’ என்று பலவாறு அவள் தன்னுள் எண்ணிப் புழுங்கிள்ை. அவளுக்குக் கண் களில் கண்ணிர் முட்டிக் கொண்டுவந்தது. காலம் இடை வெளிவிட்டுப் பரப்பியிருந்த கழிந்த நாட்களை நோக்கிச் சிறகடித்துப் பறந்தது அவளது மனப்புள்,

நாகராஜனுக்கு கல்யாணி அத்தை பெண்; நாகராஜன் கல்யாணிக்கு மாமன் மகன். உறவு முறையிலும் ஒட்டும் முறை. அவனுக்கு அவள்-அவளுக்கு அவன்’ என்ற பரிச மும் குழந்தைகள் இருவருக்கும் காலில் நகம் முளைத்த நாள் முதலாகப் போடப்பட்டதென்னவோ மெய்யிலும் மெய் யான சேதிதான்! அவர்கள் இருவரும் குழந்தைகளாவதை நிறுத்தி, அறியும் பருவத்திற்குள் தங்களே ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நிலையிலும்கூட இருவர் மனமும் ஒன்ருேடொன்று நெஞ்சோடு நெஞ்சாகப் பின்னிப் பிணைந்தன. அத்துடன் நின்ருல் மட்டும்போதுமா? இரண்டு தரப்புப் பெற்ருேர்களும் அந்நாளில் செய்துகொண்ட ஒப்பந்தம் கல்யாணியின் தந் தைக்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள்