பக்கம்:விதியின் நாயகி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 ஜீவனும் கலந்த நடிப்பு, துஷ்யந்தனைப் பிரியும் போதும், மீண்டும் ஒன்றுகூடும்போதும் தாங்கள் நிஜமாகவே கண்வர் ஆசிரமத்தின் சகுந்தவையாகவே மாறிவிட்டீர்கள். சகுந் தலையை நீங்கள் கூட மறக்கவே முடியாதல்லவா?... எங்கள் வாழ்த்துக்கள்!...” - எஞ்சியிருந்த பத்துப் பன்னிரண்டு தபால்களும் அவள் பார்வையில் மேலெழுந்தவாரியாக ஒடி ஒதுங்கின. எல்லாம் ஒரே புகழ்ச்சிப் புராணம் மூன்று நாள் முந்தி கலை விழா விலே மேனகை சகுந்தலையாக நடித்ததற்கு விளைவு இது:வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்! இன்னும் இரண்டு நாளில் பம்பாயிலிருந்து திரும்பு வதாகவும் எல்லா விவரங்களையும் நேரிலேயே பேசிக் கொள்ளலாமென்றும் ஒரு லெட்டரின் குறிப்புச் சொன்னது: மோகனசுந்தரம் எழுதியிருந்தார். 'ஐயா வருங்க போலே...' என்ருன் வேலையன். ஆேமாம்: அடுத்தநாள் ஸ்டுடியோவின் கால்வீட் பற்றிய விவரம் அவள் முன் இருந்தது. சகுந்தலே, துஷ்யந்தனைப் பிரியும் கட்டம் ஷல்ட்டிங் நடக்க வேண்டும். இந்த ஒத்திகையில் மேனகையின் தத்ரூபமான நடிப்பிலே டைரக்டர் கூட மெய்ம்மறந்து விட்டாரல்லவா? மேனகை நெடுமூச்சு விட்டாள். அதில் ஆருத்துயர் இருந்தது: ஆருத புண் இருந்தது; ரத்தக் கண்ணிர் இருந்தது. என்ன நினைத்துக் கொண்டாளோ, மாடிக்கு ஒடிஞள்: பட்டு மெத்தையில் போய் விழுந்தாள். 'காலிங் பெல்’ அவளுடைய பூ விரல்பட்டு ஒலித்தது. வேலய்யன் ஓடோடி வந்தான். கி அம்மா 19: