பக்கம்:விதியின் நாயகி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 க:ன்தான் அவர். அன்று முதல் குமார்தான் என்னுள்ளே ராஜ்யபாரம் நடத்தினர். என்னுல் இதை எப்படி மறைக்க முடியும்? விசித்திரம்தான்! குமார் நினைவிலேயே நான் மூழ் கும் சமயமெல்லாம், நான் உங்கட்குத் துரோகம் செய்வ ஆாகவே உணர்ந்தேன். என் நிலைக்கு முடிவு வேண்டும். என் குமாரின் முடிவுதான் என் முடிவு. அன்று தாங்கள் முதலில் கண்டமேனகையாகவே இன்றும்புறப்படுகிறேன். ஆம்; முதல் காதல், பிறந்த இடத்தில்தான் முடிவும் காண்கிறது...! இப்படிக்கு, உங்களவளாயிருந்து அபலே டிேனகை.” { C C. விதி சிரித்தது:

  • குமார்-மேனகை காதலை அறிந்தவன் மோகனசுந்தரம். குமார் வேலய்யனுக உருமாறியதையும் துப்புக் கண்டார். அவனேக் கொல்லத்தான் சதி செய்தார். அதற்குள் அவன் தப்பிவிட்டான். குமார் மாண்டு விட்டதாகச் சொன்ஞல், கட்டாயம் மேனகை தன்வசப்படுவாள் என்பது இவர் கனவு. நடந்ததோ?... மேனகை இவரைத் துறந்துவிட்டாள்! மேனகை-குமார்-மோகனசுந்தரம் இம்மூவரின் விசித்திரக் காதல் கடைசியில் மூன்று துருவங்களாகி விட்டனவே! பாவம்...என் அதுதாபங்கள்!’