பக்கம்:விதியின் நாயகி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 j4 "நீங்கள் கிழவனுக, வேலேயஞக உருமா ரிகுலும், உங்களு டைய கண்களில் தெரியும் அந்தக் குறுநகை சொல்லி விட் டதே, நீங்கள் என் குமார் என்று...! ஐயோ, இனி எங்கு சென்று காண்பது?...குமார்...தம் முதற்காதலில் பிறந்த மாதிரி அந்த இன்ட் ஸ்பரிசத்திற்காகவேதானே நான் இன்று மயக்கம் போட்டு விழுவது போலவும் நடித்தேன்...நீங்களும் என்னைப் பற்றிக் காத்தீர்கள்...ஐயோ குமார்,: மேனகா!...” என்று பரிவுடன் பெயர் சொல்ல உரிமை பூண்ட மோகனசுந்தரம் காரிலிருந்து இறங்கி வந்தார். அழைத்தார்; அவள் சமாளித்துக் கொண்டாள். வலிய வரவழைக்கப்பட்ட புன்னகை, சூழ்நிலையைச் சரிசெய்யப் படாத பாடு பட்டுக் கெண்டிருந்தது. மேனகா, இன்று ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்துவிட்டது. பாவம், ஒரு கிழவன்-நம் வீட்டிற்குப் புதிதாக வேலைக்கிருந் தாளுமே அவன், எங்கேர் காரில் அகப்பட்டு இறந்து விட் டான். பிழைக்க வந்தவனுக்கு எப்படிச்சாவு தொற்றியிருக் கிறது...ரொம்ப நல்லவனமே!...” என்ருர் அவர், மேனகைக்கு உயிர் இல்லை. C} Ο {} மறுநாள். படமுதலாளி மேகனசுந்தரத்தின் நடுங்கும் நுனி விரலில் தத்தளித்துக் கொண்டிருந்தது ஒரு கடிதம். .

  • அன்புள்ள கணவரின் பாதகமலங்களுக்கு, அனந்த கோடி நமஸ்காரங்கள். உங்கள் அன்புக்கு நான் ஏழேழு பிறப்பிற்கும் கடமை கொண்டவள்; ஆனால், நான் உங்கள் மனைவி மேனகையாக ஒரு கணம் கூட இருக்க முடியவில்லை. என் உள்ளக்கிறுக்கு அப்படி. முதல் காதல் பிறந்த இடம்,

தான் முடிவு காணும் இடமும்! என் முதற் காதலுக்குரியவர் குமார்-நீங்கள் மாண்டதாகக் கூறும் வேலைக்காரன் வேலை