பக்கம்:விதியின் நாயகி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 லிருந்து இந்நேரம் வரைக்கும் அவனுக்கென்று காத்திருந்தி அலுவல்கள் ஒன்ரு, இரண்டா? பசி எடுத்தது. விளக்கு போட்டதும், இரண்டு பஜ்ஜியும் ஒருசாயாவும் சாப்பிட்டது. இனி, முதலாளி கல்லா கட்டிவிட்டுப் போனதற்கப்புறம் இராச் சாப்பாடு கிடைக்கும். சரக்கு மாஸ்டரோடு குந்திச் சாப்பிட்டால், மீன்குழம்போடு மீன் வருவல் துண்டும் கிடைக்கும். ஆனல், டீ மாஸ்டர் அங்கப்பன் சோறு: போட்டால், மீன் மண்டையைக் கூடக் காட்டமாட்டான். சுத்த மோசம் அந்த அண்ணன்!... - சந்தடி அடங்கத் தொடங்கிற்று. - அப்போது, கடை வாசலில் யாரோ பெண்மணி ஒருத்தி தயங்கித் தயங்கி வந்து நின்ருள். : "என்னுங்க வேணும்? உள்ளே வாங்க’ என்று ஓடிவந்து கேட்டான் சோமையா. இரட்டை நாடியான அந்தப் பெண் கன்னச்சதைகளும் கொண்டைப் பூக்களும் குலுங்க, அந்தப் பையனைக் கூர்ந்து நோக்கிளுள். சோமையாவின் இடது கன்னத்திலிருந்த மச்சத்தையே வைத்த விழிவாங்காமல் பார்த்தாள். பிறகு, மெல்லிய அன்புப் புன்னகை தவழ, நீ யாரப்பா? என்று: விசாரித்தாள். •. நான் இந்தக் கடையிலே வேலைபார்க்கிற ஒரு எடுபிடிப் பயலுங்க. அது கிடக்கட்டும். இப்போ உங்களுக்கு என்ன வேனும், சொல்லுங்க. தோசை வறுத்த கரி இங்கே ஸ்பெஷ் லாக்கும். சரக்கு தீர்ந்திருந்தாலும், வேலை செய்கிற சிப்பந்திகளுக்கன்னு சுங்கடி பிடிச்சு வச்சிருக்கிறதிலே தருவே னுங்க எங்க முதலாளிக்கு வியாபாரம் நடக்குமில்லே, அதுக் காகத்தான் இவ்வளவு தூரம் சொல்லுறேனுங்க, அம்மா” என்ருன் சோமையா. - ჯ ზვ· ^ -- "அம்மா’ என்ற அந்த அழைப்பு சிறுவனின்மேனி புல்லரிக்கச் செய்திருக்க வேண்டுமோ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/23&oldid=476433" இலிருந்து மீள்விக்கப்பட்டது