பக்கம்:விதியின் நாயகி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வருவல் மிஞ்சாமல் போயிடுச்சுங்க!?? என்று நைச்சிகம், தொனிக்கச் சிரித்தான் டி மாஸ்டர். 'ஐயையோ!.........பாழும் தெய்வமே!’ என்று நெஞ்சு வெடிக்கக் கதறினுன் அந்த அஞதைப்பிள்ளை சோமையா; உருட்டிய சோற்றுக் கவளத்தை வீசி எறிந்தான் ஆத்திர மூள. டீமாஸ்டர் அங்கப்பனை அண்டி, அவன் சட்டையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் தன் சட்டைப்பையிலிருந்த ஒரு பழைய அட்டைத் துண்டை எடுத்து நீட்டி, நான் ஒண்ணும் அப்பன் ஆயி தெரியாத அளுதை இல்லே. இந்தாப் பா ருங்க ய்யா , என் ஆயியையும் அப்பனையும்!’ என்ருன் , சரக்குமாஸ்டர் ஆத்திரம் அடங்கிய அமைதியோடு சோமையாவைப்பற்றி, அவன் கையிலிருந்த அந்த அட்டை யை ஆவலோடு பார்த்தார். இதயம் குலுங்கியது. 'தம்பி உன்னைப் பெற்ற ஆயியையும் அப்பனையும்தான் உன்சட்டைப் பைக்குள்ளேயே வச்சிக்கிட்டு இருக்கியே? இனியும் ஏன் தம்பி நீ அழவேணும்? வா, வா. சாப்பிடலாம்!’ என்ருர். சோமையாவின் இலையில் இப்போது மீன் வருவல் காட்சியளித்தது! பாரதமும் பாகிஸ்தானும் சிம்லாவில் சந்திக்கவிருக்கும். விவரங்களைப் படித்தது வானெலி. - - * , அம்மா!?? - சோமையாவா... வந்துவிட்டாயா? வாப்பா, iா?* என்று ஆர்வம் பொங்க, அன்பு பொங்கி வழிய அழைத்தாள் சிவகாமு. தயாராக வைத்திருந்த காப்பியை எடுத்து 'இப்பதானுங்க உங்க கடையிலே காப்பி சாப்பிட்டும் புட்டு வந்தேனுங்க!” என்ருன் சிறுவன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/27&oldid=476437" இலிருந்து மீள்விக்கப்பட்டது