பக்கம்:விதியின் நாயகி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சோமையா, இனி நான் உன் எஜமான் இல்லே. நான் இனி உன் அப்பா!?? - . . - -

  • ஆமாண்டா கண்ணே! நீ எங்க மகன்!’ என்று மகிழ்ச் சிக்கண்ணிர் வடித்தாள் சிவகாமி.

சிறுவன் சோமையா மெய்ம்மறந்தான். சட்டைப்பை யைத் தொட்டுப் பார்த்தான், 'தெய்வமே!...நீ கல் இல்லை! ...எனக்கு அம்மாவும் அப்பாவும் கிடைச்சிட்டாங்க. நான் இனி நாதியத்த அளுதை இல்லை!...” என்று கும்மாளமிட்டுக் கூவிஞன். கண்ணிர் வெள்ளம் மடை திறந்தது. மறுகணம், 'அம்மா, இன்னொரு காப்பி கொடுங்க!...” என்ருன், செருமலோடு. - . . ஒரே துள்ளலில் ஓடிப்போய்க் காப்பி கொணர்ந்து கொடுத்தாள் சிவகாமி. காப்பியை வாங்கிக் கொண்டான் சோமையா. அட்டை மடிப்போடு சட்டைப்பைக்குள் இருந்த சிறிய பொட்டலத் தைப் பிரித்தான். 'தலைவலி மருந்துங்க, அம்மா!’ என்று குரல் நடுங்கச் சொல்லிக் கொண்டே, அந்தப் பொடியை காப்பியில் தூவிக் கலக்கிவிட்டுக் குடிக்கப் போளுன் சோமையா. மறுகணம், ஐயையோ! எலி மருந்தாட்டம் நாறுதே??? என்று பதறியபடி, அந்தக் காப்பியைத் தட்டிவிட்டாள் சிவகாமி. - - - “. தேவர் திகைத்தார். "... . . . எங்களை-இப்பத்தான் நிம்மதியாகச் சிரிக்க ஆரம் பிச்சிருக்கிற எங்களை ஒரு நொடியிலே கூண்டோடு கைலாசம் அனுப்பிட இருந்தியேடா, மகனே!’ என்று தரை மீளுகத் துடித்துக் கதறினுள் சிவகாமி. அ...ம்...மா! ராத்திரியே நான் கைலாசம் போயிரு o பேன். உங்க தங்கங்களைக் காணவேனுமிங்கிற ஆசைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/29&oldid=476439" இலிருந்து மீள்விக்கப்பட்டது