பக்கம்:விதியின் நாயகி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'ஓ.கே. இன்றைக்கும் எடுபிடி ட்யூட்டியை நானே கவனிச்சுக்கிறேன். ஒருவாரக் கணக்கு அப்படியே பெண்டிங் இருக்கு. குறிப்பு எழுதி, பேரேடு பதிஞ்சாகனும் நான். நான் பாங்கில்போட்ட பங்குப் பணம் பத்தாயிரமும் கரைஞ் சிட்டுது. வியாபாரிகளே நம்பினல், ப்ரொடக்ஷன் நம்மோட டெய்லி டார்ஜட்பிரகாரம் நடக்க முடியாது. முடிந்த வரை வசூலைப் பாருங்க. நாளைக்கு நீங்க வந்தவாசி போய்த் திரும்பி யதும், நிலவரத்தைப் பார்த்துக்கிட்டு, நான் கடலூர் போய் வந்தால்தான் கதை நடக்கும் போலத் தோணுது!.. ஆல் ரைட்!...” என்று ஒர் அழுத்தம் கொடுத்துச் சொல்லிவிட்டு அவருக்குப் பயணச் செலவுக்கும் பணத்தை எண்ணிக் கொடுத்தேன். மணி ஒன்பது அடிக்கிறது. போயிட்டு வாரேன், அண்ணுச்சி!?? 'இருங்க, காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம். அப்புறம். சிகரெட் பற்ற வைக்கலாம்!” பேஷ் சைக்கிள் ரிக்ஷா வந்து விட்டது! ஒடிக் கொண்டிருந்த மின் விசை மோட்டார் 'சடக்” கென்று நின்றது. வெற்றிலைப் பொட்டணத்தை அப்படியே போட்டு விட்டு, உள்ளே ஒடினேன். - ‘பான்குட்ஸ் ரிவால்வர்- அதாவது, மின்விசை மிட்டாய் அண்டா நின்றுவிட்டது. அண்டாவில் பீன்ஸ் மிட்டாய்” பாவிஷ் ஏறிக் கொண்டிருந்த நேரம் அல்லவா? சுளையாக இருபது ரூபாய் கை விட்டுச் செல்ல, புதிய ரெமே பெல்ட் ஒன்று கைதேடிவந்தது. மேஸ்திரி நடேசன் மாதிரி மற்ற வேலையாட்களும் அமைந்திருந்தால், என்னு: டைய அமிர்தாஞ்சனச் சீசா அதற்குள் தீர்ந்திருக்க மாட்டாதே! ; : . . . . -> --------------------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/43&oldid=476453" இலிருந்து மீள்விக்கப்பட்டது