பக்கம்:விதியின் நாயகி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 308 டிகிரி வெப்பத்திலே காய்ச்சப்பட்ட சர்க்கரைப் பாகு அதோ, பிளேட்டில் தளும்பி நிற்கிறது. கோவிந்தனின் இரு கரங்களிலும் இருந்த படைவெட்டிகள் அந்தக் குழம் பைத் தடுத்து நிறுத்த, பழனி எஸ்ஸென்ஸை அளவு பார்த்து ஊற்றி லாவகமாகக் கலக்க, வேலப்பன் இயந்திர கதியில் படையை வெட்டி வெட்டி நீட்ட, மிட்டாய் ஸ்டாண்டில் தயாராக நின்ற பெரியவர் நாயுடு படையை வாங்கி வாங்கி அச்சு ரோலருக்கு அடியில் தள்ள, முத்தையன் ரோலரை மூச்சிறைக்கச் சுற்ற, ஏ. பி. ஸி. டி மிட்டாய் ட்ராப்ஸ்: ரகத்தில் உருவாகி அடுத்த பிளேட்டில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. பதம் பார்த்து பிசிறு தட்டி, மிட்டாய். ஏடுகளை இரண்டு கைகளாலும் உடைத்துக் குவிக்கிருர் நாயுடு. - களத்துமேட்டில் அம்பாரம் கட்டிக் கிடக்குமே சீரகச் சம்பா, அந்த இனிய பசுமை நினைவு என்னுள் எழ, ஒரு கை மிட்டாயை அள்ளி நோட்டம் கணித்தேன். அச்சு விலகியிருந்த மிட்டாய்கள் சிலவற்றைச் சுட்டினேன் நாயுடுவிடம். மேஸ்திரியும் எட்டிப் பார்த்தார். சுத்தியும் ஸ்பானரும் ஓடிவரவே, நகர்ந்தேன் நான். தபால் நேரம் அது. *அண்ணுச்சி!” என்ற குரல்- புதிய குரல் கேட்கவே, பாட்லி பாய் கம்பெனிக் கடிதத்தை மடித்தபடி, பார்வையை வெளிப்புறம் செலுத்தினேன். , யாரோ ஒரு பையன்பிஞ்சுக் கரங்களைக் கூப்பியவண்ணம் வந்து நின்றன். !....' ...: ...; ....' ... ". . . . . . . . என்ன வேனும்? எனக்கே உரித்தான வேகத்தோடு தான் இக் கேள்வி வெளிப்பட்டிருக்க வேண்டும். “உங்க அன்பு வேணுமுங்க, அண்ணுச்சி: நான் புன்னகை செய்தேன். அப்படியா, தம்பி? என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/45&oldid=476455" இலிருந்து மீள்விக்கப்பட்டது